கார்களைபோல் ஸ்மார்ட் சாவி வசதிகொண்ட ஆக்டிவா 125 அறிமுகம்... இவ்ளோ கம்மியான விலையில் இப்படி ஒரு வசதியா!!

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் புதிய 2023 ஆக்டிவா 125 (Activa 125) ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓபிடி 2 விதிகளுக்கு இணங்க தயார் செய்யப்பட்ட டூ-வீலர் இதுவாகும். ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரம் (Drum), டிரம் அலாய் வீல் (Drum Alloy), டிஸ்க் ( Disc) மற்றும் எச்-ஸ்மார்ட் (H-Smart) ஆகியவையே அவை ஆகும். இந்த நான்கு தேர்வுகளில் எச்-ஸ்மார்டே அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடிய ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. ஏனெனில் புதிய தொழில்நுட்ப வசதிகளை இந்த தேர்வில் ஹோண்டா வாரி வழங்கி இருக்கின்றது.

Activa 125

குறிப்பாக, கார்களில் மட்டுமே வழங்கப்படக் கூடிய ஸ்மார்ட் வகை சாவி (Smart Key) இந்த தேர்வில் வழங்கப்படுகின்றது. இந்த சாவியை வாகனத்தில் பொருத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது நம் கைகளில் இருந்தால் மட்டுமே போதுமானது. ஸ்கூட்டரை இயக்கிக் கொள்ள முடியும்.

இத்துடன், இருக்கைக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜை திறத்தல் மற்றும் ஃப்யூவல் லிட்-ஐ திறத்தல் உள்ளிட்டவற்றையும் செய்து கொள்ள முடியும். ஆனால், எதற்கும் சாவியை வண்டியுடன் இணைக்க வேண்டும் என்கிற நிலை இருக்காது. இத்தகைய அம்சத்தையே புதிய ஆக்டிவாவின் எச்-ஸ்மார்ட் தேர்வில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

Activa 125

இதுதவிர இன்னும் பல புதிய டெக்னாலஜிக்களை இந்த நிறுவனம் புதிய 2023 ஆக்டிவாவில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஓபிடி 2 விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட 125 சிசி பிஜிஎம்-எஃப்ஐ எஞ்ஜினே ஆக்டிவாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், இஎஸ்பி (eSP) எனப்படும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் டெக்னாலஜியையும் ஹோண்டா, ஆக்டிவாவில் வழங்கி உள்ளது.

இந்த அம்சம் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். மிகவும் ஸ்மூத்தான ரைடிங் அனுபவம் மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கு இந்த தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும். இதுதவிர மிக சிறந்த எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டிற்கும் இந்த தொழில்நுட்பம் மிகுந்த உதவியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Activa 125

புதிதாக ஏசிஜி ஸ்டார்டரை சேர்த்திருப்பதாக ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. இது வழக்கமான ஸ்டார்டிங் மோட்டாரைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமானதாக செயல்படும். அதாவது, சத்தமே இல்லாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும். மேலும், மின்சாரத்தை உருவாக்கவும், வாகன இயக்கத்தின்போது பேட்டரியை சார்ஜ் செய்யவும் இந்த தொழில்நுட்பம் உதவும்.

இதன் எஞ்ஜினில் ஆறு சென்சார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த சென்சார்கள் சிலிண்டர் தேவைக்கு ஏற்ப மட்டுமே எரிபொருளை அனுப்பும். இதற்கேற்பவே இதன் ஃப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டம் ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக மைலேஜ் தரக்கூடியதாக புதிய ஹோண்டா ஆக்டிவா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Activa 125

தொழில்நுட்ப வசதியாக ஆக்டிவா 125-இல் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக நேரம், ஈகோ இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர், பயண வரலாறு, எரிபொருள் இருப்பு மற்றும் மைலேஜ் விபரம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர இன்னும் பல முக்கிய தகவல்களையும் இது வழங்கும்.

மேலும், எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், 18 லிட்டர் வசதிக் கொண்ட ஸ்டோரேஜ் வசதி, மெட்டல் பாடி, காம்பி பிரேக்கிங் சிஸ்டம், 3 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ரியர் சஸ்பென்ஷன், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் (முன் பக்கம்) ட்யூப் லெஸ் டயர்கள் உள்ளிட்ட அம்சங்களும் ஆக்டிவா 125இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Activa 125

இதன் டிசைனும் மிக சிறப்பானதாக இருக்கின்றது. ஆக்டிவாவின் பாரம்பரிய தோற்றம் மாற்றப்படாமலே அதன் தோற்றம் அழகாக்கப்பட்டு உள்ளது. புதிய முழு எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி இன்டிகேட்டர் லைட்டுகள் மற்றும் பின் பக்க லைட்டுகளால் ஸ்கூட்டருக்கு அழகு சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் கிராப் ரெயிலும் (கை பிடியும்) அழகானதாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

அறிமுகமாக புதிய ஆக்டிவா 125க்கு ரூ. 78,920 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டிரம் பிரேக் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அலாய் வீல் கொண்ட டிரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 82,588-ம், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 86,093-ம் மற்றும், எச்-ஸ்மார்ட் வேரியண்டிற்கு ரூ. 88,093-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக 5விதமான புதிய நிற தேர்வுகளில் ஆக்டிவா கிடைக்கும். பேர்ல் நைட் ஸ்டார்ட் பிளாக் (Pearl Night Start Black), ஹெவி கிரே மெட்டாலிக் (Heavy Gray Metallic) (டிரம் பிரேக் வேரியண்டில் கிடைக்காது), ரிபெல் ரெட் மெட்டாலிக் (Rebel Red Metallic), பேர்ல் பிரிசியஸ் ஒயிட் (Pearl Precious White) மற்றும் மிட்நைட் ப்ளூ மெட்டாலிக் (Mid Night Blue Metallic) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஏற்கனவே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் டூ-வீலராக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் புதிய ஆக்டிவா 125 இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது, இன்னும் பலமடங்கு விற்பனையை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இன்னும் சில ஆண்டுகளுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டராகவும் இருக்கும் என எங்களால் யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 28, 2023, 15:23 [IST]
English summary
Obd2 compliant honda 2023 activa 125 launched in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X