ரொம்ப நாளா எதிர்பார்த்த இ-பைக்கின் டெலிவரி தொடங்கிருச்சு! முதல் நாளிலேயே இத்தன பேருக்கு டெலிவரி கொடுத்தாச்சா!!

ஓபென் எலெக்ட்ரிக், வெற்றிகரமாக அதன் முதல் 25 யூனிட் ரோர் எலெக்ட்ரிக் பைக்குகளை டெலிவரி கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மின்சார பைக்குகள் டெலிவரி வழங்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான ஸ்டார்ட்-அப் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஓபென் எலெக்ட்ரிக்-ம் ஒன்று. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் வெற்றிகரமாக அதன் முதல் மின்சார பைக்கின் டெலிவரி பணிகளை இந்திய சந்தையில் தொடங்கி இருக்கின்றது.

Oben rorr

முதல்கட்டமாக 25 நபர்களுக்கு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை டெலிவரி வழங்கி இருக்கின்றது. சமீபத்தில் நடைபெற்ற எஃப்2ஆர் எனும் நிகழ்ச்சியின் வாயிலாகவே இந்த டெலிவரி சம்பவம் நிகழ்த்தப்பட்டது. தற்பது பெங்களூருவிலேயே டெலிவரி பணிகள் தொடங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளிலும் மின்சார பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன.

இந்த இ-பைக்கின் விலை ரூ. 1.5 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுபோன்று மலிவு விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும், மிக சிறந்த செயல் திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் என்பதாலும் இருசக்கர வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த இ-பைக்காக ஓபென் ரோர் காட்சியளிக்கின்றது.

Oben rorr motorcycle first 25 delivered

இதை புக் செய்துவிட்டு நீண்ட காலமாக பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்த இ-பைக்கிற்கு 21 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருப்பது தெரிய வருகின்றது. ஆனால், இப்போது இன்னும் அதிகரித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ரோர் மின்சார பைக்கின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன.

இந்த பைக்கால் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை வெறும் 3 செகண்டுகளிலேயே அதனால் தொட்டுவிட முடியும். மேலும், ஓர் முழு சார்ஜில் இதனால் 187 கிமீ வரை பயணிக்க முடியும்.

Oben rorr motorcycle key delivered

இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 4.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரங்களே போதுமானது. இதன் உடன் சேர்த்து 8 kWh திறன் கொண்ட ஐபிஎம்எஸ்எம் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப வசதியிலும் இந்த எலெக்ட்ரிக் பைக் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இணைப்பு வசதி என நவீன கால அம்சங்கள் பல இந்த பைக்கில் மிக தாராளமாக வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்று இன்னும் பல அம்சங்களால் ரோர் எலெக்ட்ரிக் பைக் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

Oben rorr motorcycle

வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி லைட்டுகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி வால் பகுதி மின் விளக்கு ஆகிய கூறுகளாலும் ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக் அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மேலும் அழகானதாகக் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு டூ-வீலர் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது ஓபென் ரோர் இ-பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதுவும் வரும் நாட்களில் விற்பனையில் சக்கைப் போடு போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 12, 2023, 10:13 [IST]
English summary
Oben rorr deliveries started here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X