நாடே காத்திருக்கும் எலக்ட்ரிக் பைக் கஸ்டமர்ஸ் கைக்கு வர உள்ளது!! புக் செய்தவர்கள் ஹாப்பி அண்ணாச்சி...

ஒபென் ரோர் (Oben Rorr) எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் எப்போதும் துவங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஒபென் எலக்ட்ரிக் அதன் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக ஒபென் ரோரை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில், இந்த எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது.

oben rorr electric bike deliveries from july

இதன்படி, ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்குகளை வருகிற ஜூலை மாத முதல் வாரத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி வழங்க உள்ளதாக ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் மிக சமீபத்தில்தான் பெங்களூர், எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் தனது முதல் எக்ஸ்ப்ரீயன்ஸ் மையத்தை நிறுவியது.

பெங்களூர் உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஷோரூம் உள்ளன. ஆதலால் வாடிக்கையாளர்களுக்கு ரோர் எலக்ட்ரிக் பைக்கை டெலிவிரி செய்வதில் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெரியதாக பிரச்சனை இருக்காது. உற்பத்தி திறனை அதிகரிக்க, ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கு 21 ஆயிரம் ப்ரீ-புக்கிங் வரையில் ஏற்க ஒபென் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக், அரசாங்கத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான சமீபத்திய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தர நிலைகளை பூர்த்தி செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 10 கிலோவாட்ஸ் IPMSM மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 100kmph வேகத்தில் செல்ல முடியும்.

oben rorr electric bike deliveries from july

0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 187 கிமீ தொலைவிற்கு (IDC-ஆல் சான்றளிக்கப்பட்டது) பயணிக்கலாம். இவ்வாறு அதிக செயல்படுதிறனை வழங்குவது மட்டுமின்றி, ஒபென் ரோர் ஆனது பாதுக்காப்பான எலக்ட்ரிக் பைக்கும் ஆகும்.

இந்த பைக்கில் லித்தியம் இரும்பு பாஸ்பரஸ் (LFP) தொழிற்நுட்பத்தை கொண்ட பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மற்ற பேட்டரிகளை காட்டிலும் ரோரின் பேட்டரி தொகுப்பு 50% கூடுதலாக வெப்பம் ஏற்படுவதை தடுக்கும். அதேபோல், இந்தியாவில் உள்ள மற்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை காட்டிலும் விரைவாக பாதி நேரத்திலேயே ரோர் சார்ஜாகிவிடும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்திய சந்தையில் வெற்றி பெறக்கூடும் என தற்சமயம் யூகிக்கப்படும் மிகவும் சில எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒபென் ரோர் ஒன்றாகும். இத்தகைய எலக்ட்ரிக் பைக் மிக விரைவில் மக்களை சென்றடைய உள்ளது. அதன் பின்னரே நிஜ உலகில் ஒபென் ரோர் எந்த அளவிற்கு வரவேற்பு பெறவுள்ளது என்பது தெரியவரும். ஆதலால், பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 30, 2023, 23:21 [IST]
English summary
Oben rorr electric bike deliveries will start july 1st week
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+