110 கி.மீ வேகத்தில் சீறிபாயும் எலெக்டரிக் பைக்! ஓபன் ரோர் ரிவியூ வீடியோ!

ஓபன் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ரோர் என்ற தனது எலெக்ட்ரிக் டூவீலரை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவில் எலக்ட்ரிக் டூவீலர்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய புரட்சியே ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ஓபன் நிறுவனமும் தனது தயாரிப்பை களம் இறக்கி மக்கள் விரும்பும் வாகனத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி தான் இந்த ரோர் என்ற எலெக்ட்ரிக் பைக் தயாராகியுள்ளது.

இந்த பைக்கை ஓட்டி பார்க்க ஓபன் நிறுவனம் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்திருந்தது. எங்கள் குழுவும் இந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றோம். அங்கு இந்த பைக்கை ஓட்டிப் பார்த்த பின்பு எங்களுக்கு கிடைத்த அனுபவம் இந்த பைக்கை ஓட்டும் போது எப்படி இருக்கிறது? இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்னென்ன? உள்ளிட்ட விஷயங்களை எங்கள் விமர்சனமாக வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக்கில் 4.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது இந்த பேட்டரியில் இந்த பைக் 187 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என ஐடிசி சான்று வழங்கியுள்ளது. ரியல் வேல்டில் குறைந்தபட்சம் 150 கிலோமீட்டர் ரேஞ்சாவது வழங்கும் என தெரிகிறது. இந்த பைக்கில் மொத்தம் மூன்று விதமான ரைடு மோடுகள் உள்ளன. எக்கோ, சிட்டி மற்றும் ஹேவொக் ஆகிய ரைடு மோடுகள் இருக்கிறது.

Oben Rorr Tamil Review Video

இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் பைக்காக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த தேவையை இந்த பைக் பூர்த்தி செய்யும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 9:37 [IST]
English summary
Oben rorr electric bike video review in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+