இந்த எலக்ட்ரிக் பைக்கை கம்மியான விலையில் சொந்தமாக்குவதற்கு சரியான டைம் வந்தாச்சு!! தீபாவளியை விட்டால் முடியாது
ஒடிசி எலக்ட்ரிக் (Odysse Electric) நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதன் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க நீண்ட காலமாக திட்டமிட்டு வருபவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் ஒடிசி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம்.
இந்தியாவில் தோன்றிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று ஒடிசி எலக்ட்ரிக் ஆகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அதன் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த பண்டிகை சிறப்பு சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சலுகைகளை பெற முடியும். இந்த சலுகைகள் குறித்து ஒடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, ஒடிசி நிறுவனத்தின் அனைத்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களிலும் ரூ.7,500 பணம் தள்ளுபடியை பெறலாம்.
அதாவது, அனைத்து ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்களிலும் குறுகிய காலத்திற்கு ரூ.7,500ஐ மிச்சப்படுத்தலாம். இந்த ரூ.7,500இல் ரூ.5,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.2,500 மதிப்பிலான ஸ்டைலிஷான ஆக்ஸஸரீகள் அடங்குகின்றன. அதாவது, ஒடிசி எலக்ட்ரிக் வாகனம் ஏதேனும் ஒன்றை வாங்கினாலும், ரூ.2,500 மதிப்பிலான ஸ்டைலிஷான ஆக்ஸஸரீகள் கிடைக்கும். ஒடிஜி நிறுவனத்தின் இந்த சலுகைகளை ஃப்ளிப்கார்ட் இணையத்தளத்திலும் பெறலாம்.

அதாவது, ஃப்ளிப்கார்ட் மூலமாக புக் செய்தவர்களுக்கு ஒடிசி எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் ஹோம் டெலிவிரி செய்யப்படும். அத்துடன், ஒடிசியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையத்தின் வாயிலாகவும் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஒடிசி டீலர்ஷிப் மையத்தை தொடர்பு கொள்ளவும்.
ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் வேடர் என்ற எலக்ட்ரிக் பைக்கும், ஹாவ்க், இ2கோ, இ2கோ பிளஸ், எவோகிஸ், வி2, வி2 பிளஸ் மற்றும் ட்ரோட் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் வேடர் ஆனது ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் அட்வான்ஸ்டு அம்சங்களை கொண்ட மாடர்ன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும்.

கீலெஸ் எண்ட்ரீ, ஆண்டி-தீஃப்ட் லாக் சிஸ்டம், மல்டிபிள் ரைடிங் மோட்கள், கூகுள் மேப் நேவிகேஷன் உள்ளிட்டவை ஒடிசி ரைடரில் வழங்கப்படும் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். அத்துடன், 7-இன்ச் ஆண்ட்ராய்டு டிஸ்பிளேவும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே மூலமாக ரைடர் வாகனத்தை பற்றிய தனக்கு தேவையான விபரங்களை பெறலாம். ஏற்கனவே கூறியதுபோல், இந்த ஒடிசி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒடிசி நிறுவனம் தற்போதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சில மாநகரங்களிலும், நகரங்களிலும் மட்டுமே ஷோரூம்களும், சர்வீஸ் செண்டர்களும் உள்ளன. இருப்பினும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை நிறைய பேர் வாங்குகிறார்கள். அவர்களுள் ஒருவராக இணைய, இந்த சலுகை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









