எல்லா பிரச்னையையும் ஒடச்சு போட்டு வந்திருக்கு.. பஜாஜ் பிளாட்டினாபோல பயன்படும் ஒடைசி வேடார் இ-பைக் அறிமுகம்!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒடைசி (Odysse)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக் மாடலே தற்போது நாட்டில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒடைசி வேடர் (Odysse Vader) எனும் மாடலே அது ஆகும்.

என்னது இந்த எலெக்ட்ரிக் பைக் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றதா? அப்படினா இது ஃபஸ்லிஃப்ட் அல்லது அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனா என்கிற கேள்வியும், சந்தேகமும் உங்களுக்கும் எழும்பிருக்கலாம். அதுதான் இல்லை. அந்த பைக்கை நடப்பாண்டின் தொடக்கத்திலேயே ஒடைசி விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது.

Odysse vader side design

ஆனால், சான்றளிப்பில் சிறிய சிக்கல் இருந்த காரணத்தினால், விற்பனைக்குக் கிடைப்பதில் மிகப் பெரிய சிக்கல் நிலவியது. இந்த நிலையிலேயே அனைத்து சான்றிதழ் சிக்கல்களும் சரி செய்யப்பட்டு அது மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. தற்போது ஐகாட் (International Centre for Automotive Technology) சான்று பெற்றே அது விற்பனைக்குக் களமிறங்கி இருக்கின்றது.

ஆகையால், வெகு விரைவில் இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இ-பைக்கை இந்திய சாலையில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் காண முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதி நவீன சிறப்பு வசதிகள் தாங்கிய தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் பைக்கே வேடர் ஆகும்.

Odysse vader

ஆமாங்க, ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா போன்ற தினசரி பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் பைக்கே வேடர் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஐந்து விதமான நிற தேர்வுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். வெனோம் பச்சை, ஃபையரி சிவப்பு, மிட்நைட் நீலம், மிஸ்ட்ரி கிரே மற்றும் குளாஸ்ஸி பிளாக் ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இந்த பைக்கில் 7 அங்குல ஆன்ட்ராய்டு வசதிக் கொண்ட திரை, கூகுள் நேவிகேஷன் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த திரையின் வாயிலாக எலெக்ட்ரிக் மோட்டாரின் ஆர்பிஎம், ஸ்பீடு, ரேஞ்ஜ், பேட்டரி லெவல் என பன்முக முக்கிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

Odysse vader front view

இதுதவிர, இந்த திரையின் வாயிலாக இணைய இணைப்பையும் செய்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாகவே லைவ் கூகுள் மேப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்ற சூப்பரான தொழில்நுட்ப வசதிகளுடன் அதிக ரேஞ்ஜை வழங்கும் பேட்டரி பேக்கும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக்கில், 3.7 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும். ஆகையால், மழை நீர் மற்றும் தூசி ஆகியவற்றால் அவ்வளவு எளிதில் இந்த இ-பைக் சேதம் அடையாது என தெரிகின்றது.

Odysse vader rear

இதை முழுமையாக சார்ஜ் செய்தால் முழுமையாக 125 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதேபோல், இ-பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இதற்காக அப்பைக்கில் 3000 வாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இ-பைக்கின் ஒட்டுமொத்த எடையே 128 கிலோ மட்டுமே ஆகும்.

ஆகையால், இதனைக் கையாள்வது என்பது மிக மிக சுலபம் ஆகும். மிக சிறந்த பிரேக்கிங் திறனுக்காக இந்த பைக்கில் 240 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 220 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மிக சிறந்த மற்றும் ஸ்மூத்தான பிரேக்கிங்கிற்கு உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே விலை குறைவான தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக்கை ஒடைசி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 1,29,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 23:00 [IST]
English summary
Odysse vader received icat certificate and launched again
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X