தாய்லாந்துக்கு ஒத்த பைசா செலவில்லாம டூர் போய்ட்டு வர வாய்ப்பு! நீங்க செய்ய வேண்டிய ஒரே காரியம் இதுதான்!
பல நாட்களாக பிளான் போட்டும் தாய்லாந்துக்கு போக முடியாம தவித்துக் கொண்டிருக்கின்றீர்களா. ஒரு பைசா செலவில்லாம அந்த ஊருக்கு சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பு தற்போது உருவாகி இருக்கின்றது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
தாய்லாந்துக்கு டூர் போகணும்னு ரொம்ப நாளா பிளான் போட்டும் நடக்காம இருக்குதா?, இந்த ஊருக்கு போய்ட்டு வந்தா எவ்ளோ செலவாகுமோ?, சுற்றுலா போய்ட்டு வந்த பின்னாடி என்ன மாதிரியான பொருளாதார பிரச்னை அந்த மாசம் ஏற்படுமோ?, உள்ளிட்ட தயக்கத்தினால் நீங்க உங்களோட தாய்லாந்து டூர் கனவை ஒத்தி வைத்திருக்கீங்களா?, கவலையே வேண்டாம், ஒத்த பைசா செலவில்லாம உங்களால் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வர முடியும்.

"அது எப்படி சாத்தியம்" என்றுதானே கேக்குறீங்க.. பிரபல எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி அறிவித்திருக்கும் திட்டத்தின் வாயிலாக இது சாத்தியமே. நிறுவனம் அதன் மின்சார இருசக்கர வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சில சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றது.
அதில் ஒன்றே தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் ஆகும். நிறுவனத்தின் ஃபாஸ்ட் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், குலுக்கல் முறையிலேயே அந்த நபர் தேர்வு செய்யப்பட இருக்கின்றார். தேர்ந்தெடுக்கப்படும் நபரால் 4 பகல் மற்றும் 3 இரவுகள் தாய்லாந்தில் தங்கிக் கொள்ள முடியும்.

இந்த ஒட்டுமொத்த சுற்றுலாவின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த சூப்பரான திட்டத்துடன் சேர்த்து இன்னும் சில திட்டங்களையும் ஒகாயா நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ. 500 வரையில் சிறப்பு கேஷ்பேக் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் உடன் சேர்த்தே தாய்லாந்து சுற்றுலா செல்லும் வாய்ப்பையும் ஒகாயா இவி நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஒரே ஒரு நபர் மட்டுமே இந்த சுற்றுலா திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்.

ஒகாயாவின் ஃபாஸ்ட் சீரிஸின்கீழ் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்3, ஃபாஸ்ட் 2பி மற்றும் எஃப்2டி ஆகிய மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் விலைகள் மிக சமீபத்திலேயே உயர்த்தப்பட்டன. மத்திய அரசு ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கி வந்த மானியத் தொகை குறைத்ததன் காரணத்தினாலேயே இதன் விலைகள் அதிகரிப்பு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதைய நிலவரப்படி ஃபாஸ்ட் எஃப்4 ரூ. 1.39 லட்சத்திற்கும், ஃபாஸ்ட் எஃப்3 ரூ. 1.29 லட்சத்துக்கும், ஃபாஸ்ட் எஃப்2பி 1.10 லட்ச ரூபாய்க்கும், ஃபாஸ்ட் எஃப்2டி 91,999க்கும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலிவு விலை பைக்கிற்கே சிறப்பு கேஷ்பேக் திட்டம் மற்றும் தாய்லாந்து சுற்றுலா திட்டத்தை ஒகாயா இவி நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் புதிய திட்டத்தின் வாயிலாக ஃபாஸ்ட் சீரிஸ் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதை பொருத்திருந்துதான் எதிர்பார்க்க வேண்டும். இந்த சலுகை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே நிலுவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









