Okaya EV வாங்குனா கோவா டூர் என்ன தாய்லாந்துக்கே கூட்டிட்டு போறாங்களாம்! இப்பவே புக் பண்ணிட வேண்டியது தான்!
எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஒகாயா நிறுவனம் தனது நிறுவன இ-ஸ்கூட்டர்களுக்கான ஏப்ரல் மாத தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதை விரிவாகக் காணலாம் வாருங்கள்.
ஒகாயா நிறுவனம் அறிவித்துள்ளபடி அந்நிறுவனத்தின் இ- ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை வாங்கினால் ரூ1750 தள்ளுபடியாக வழங்கப்படும். இது மட்டுமல்ல இந்த ஸ்கூட்டரை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிச்சயம் ரூ5 ஆயிரம் கேஷ்பேக் அல்லது 3 இரவு/4பகல் தாய்லாந்து சுற்றுலாவைப் பெறும் வாய்ப்பை அறிவித்துள்ளது.

இந்த ஆஃபர் அந்நிறுவனத்தின் குறைந்த மற்றும் அதிக வேக ஸ்கூட்டர்களுக்கு பொருந்தும், அதன்படி இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சியான், மேட் கிரீன், மெட்டாலிக் க்ரே, மெட்டாலிக் சில்வர், மற்றும் மெட்டாலிக் ஒயிட் ஆகிய 6 கலர் ஆப்ஷன்கள் இருக்கின்றன.
இதில் டெஸ்ட் டிரைவ்க்கான ஆஃபர் ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டுமே இருக்கிறது. இந்த ஆஃபரை பெற வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவிற்கு ஆன்லைன் மூலம் அப்ளே செய்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் டெஸ்ட் டிரைவ் செய்த பின்பு வாகனம் மற்றும் டீலருடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் #ridewithokayaev என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட வேண்டும்.
இது எல்லாம் முடிந்த பிறகு ரூ1750க்கான வவுச்சர் வழங்கப்படும் அதை வைத்து இந்த வாகனத்தை வாங்கும் போது அதை விலையில் தள்ளுபடியைப் பெறலாம். இது மட்டுமல்ல தற்போது ஒகாயா கார்னிவெல் ஆஃபரும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒகாயா இ-ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளருக்கு அவர்கள் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும்.
அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து வாகனம் வாங்கியதற்கான தகவல்களைக் கொடுத்தால் அதில் ஒரு ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். அதை ஸ்கிராட்ச் செய்வது மூலமும் சில பரிசுகளை அவர்கள் பெறலாம். டெஸ்ட் டிரைவ் ஆஃபர், தாய்லாந்து சுற்றுலா ஆஃபர் மற்றும் கார்னிவல் ஆஃபர் என 3 விதமான ஆஃபர்கள் இந்த மாதம் வழங்கப்படவுள்ளது.
ஒகாயா இவி நிறுவனம் தற்போது 5 விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப் 3, ஃபாஸ்ட் எஃப்2எஃப், ஃப்ரீடம் மற்றும் ஃபாஸ்ட் எஃப்2பி ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.
இதில் இருப்பதிலேயே குறைந்த விலையில் ரூ74,899 என்ற விலையி் ஃப்ரீடம் ஸ்கூட்டரையும், அதிக விலையில் ஃபாஸ்ட் எஃப்4 என்ற ஸ்கூட்டரை ரூ1.13லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டர்களில் எல்எஃப்பி எனப்படும் லித்தியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications








