கார்களைபோல் ரிமோட் சாவி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை 83,000 ரூபா மட்டும்தான்!

ஒகாயா நிறுவனம் அதன் ஃபாஸ்ட் எஃப்2எஃப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் சிறப்பு தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒகாயா நிறுவனம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தரமான புதுமு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Faast F2F) எனும் மின்சார ஸ்கூட்டரையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 83,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் களமிறங்கும் ஒகாயாவின் இரண்டாவது தயாரிப்பு இது ஆகும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஃபுல் சார்ஜில் இவ்ளோ தூரம் போகலாமா!

ஆமாங்க, ஏற்கனவே இம்மாதம் பத்தாம் தேதி நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்3 (Okaya Faast F3) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்தே இப்போது நிறுவனம் மற்றுமொரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான எஃப்2எஃப் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் விபரம்

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 60V 36Ah (2.2 kWh) லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன், 800W BLDC ஹப் மோட்டாரும் மிக சிறந்த வேக திறனுக்காக ஒகாயா ஃபாஸ்ட் எஃப்2எஃப் ஸ்கூட்டரில் பயன்படுத்தி இருக்காங்க. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இந்த மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆகிய இரண்டிற்கும் இரண்டு ஆண்டுகள் வாரண்டியை ஒகாயா நிறுவனம் அறிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

குடும்ப பெண்கள், மாணவர்கள்தான் இலக்கு

இந்த வாகனத்தை மாணவர்கள், இளம் தலைமுறையினர்கள், குடும்ப பெண்கள் மற்றும் தினசரி அலுவலகம் சென்று வருபவர்கள் உள்ளிட்டோரைக் கருத்தில் கொண்டே ஒகாயா உருவாக்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அனைவரும் நுகர கூடிய மிகக் குறைவான விலையையும் அந்நிறுவனம் நிர்ணயம் செய்து இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் கருவிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ரிமோட் சாவி

அந்தவகையில், இந்தியாவின் கரடு, முரடான சாலையை சமாளிக்க ஏதுவாக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, ரிமோட் வசதிக் கொண்ட சாவி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மிகவும் ஸ்டைலான டிஆர்எல்கள் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் எட்ஜியான தோற்றம் கொண்ட வால் பகுதி லைட் உள்ளிட்டவையும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது.

முழுசா சார்ஜ் பண்ண இவ்ளோ நேரம் ஆகுமா!

இத்துடன், ட்யூப் லெஸ் டயரும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பள்ளம் மேடுகள் நிறைந்த சாலையை சமாளிக்கும் பொருட்டே இந்த வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் வழங்கப்பட்டு உள்ளது. இது, சிறந்த ரேஞ்ஜ் திறனுக்கு வழிவகுக்கும் வகையில் நல்ல கிரிப் தன்மையுடன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ரைடிங் மோட் விபரம்

இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோட்களே வழங்கப்பட்டு உள்ளன. ஒகாயா நிறுவனத்திற்கு சொந்தமாக தற்போது நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து ஷோரூம்களிலும் புதிய ஒகாயா ஃபாஸ்ட் எஃப்2எஃப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

இதுதவிர நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ள முடியும். நிற தேர்வை பொருத்தவரை ஆறு விதமான நிற தேர்வுகளில் எஃப்2எஃப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

நிற தேர்வின் விபரம்:

மெட்டாலிக் பிளாக் (Metallic Black)
மெட்டாலிக் சையன் (Metallic Cyan)
மேட் கிரீன் (Matte Green)
மெட்டாலிக் கிரே (Metallic Grey)
மெட்டாலிக் சில்வர் (Metallic Silver)
மெட்டாலிக் ஒயிட் (Metallic White)

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 13:58 [IST]
English summary
Okaya ev faast f2f launched in india at rs 83 999
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X