ஒன்றா, இரண்டா பல ஸ்கூட்டர்களுக்கு இதோட வருகை ஆபத்தா அமைய போகுது! 10ம் தேதி அறிமுகமாகிறது புதிய இ-ஸ்கூட்டர்!

வரும் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு பற்றிய விபரங்கள் இணையத்தின் வாயிலாகக் கசிந்து உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா வரும் 10 ஆம் தேதி ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை மிக சமீபத்தில் டீசர் படத்தின் வாயிலாக நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது. அந்த டீசரில் ஓர் புதிய தயாரிப்பை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மட்டுமே நிறுவனம் அறிவித்திருந்தது.

ஒகாயா

இந்த நிலையில், அது என்ன மாடலை, என்ன விலையில், என்ன மாதிரியான சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது என்கிற பல முக்கிய விபரங்கள் இணையத்தின் வாயிலாகக் கசிந்து உள்ளன. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே வெளியுலகில் இந்த முக்கிய தகவல்கள் கசிந்திருக்கின்றது. ஒகாயா நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்3 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே நாளை மறு நாள் (பிப்ரவரி 10) இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இது நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஏற்கனவே நிறுவனம் ஃபாஸ்ட் எஃப்4 (Faast F4), ஃப்ரீடம் (Freedom)மற்றும் கிளாசிக் ஐக்யூ (ClassicIQ) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே விரைவில் ஃபாஸ்ட் எஃப்3 விற்பனைக்கு வர இருக்கின்றது. ரூ. 99,999 க்கு இது விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஒகாயா

மூன்று விதமான ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட இருக்கின்றன. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் எனும் ரைடிங் மோட்களே ஃபாஸ்ட் எஃப் 3-இல் வழங்கப்பட உள்ளன. இதுதவிர எல்இடி ஹெட்லைட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பகல்நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்குகளும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன், எளிதில் ரிவர்ஸ் எடுக்கும் விதமாக ரிவர்ஸிங் மோடும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

மின்சார மோட்டாரை பொருத்தவரை 1,200 வாட் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட் திறனை வெளியேற்றக் கூடியது. இத்துடன், 3.5 kWh திறன் கொண்ட லித்தியன் அயன் எல்எஃப்பி பேட்டரி பேக்கும் ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஒகாயா

Source: Rushlane

இதனை 160 கிமீட்டராக உயர்த்திக் கொள்ளும் வசதியும் ஃபாஸ்ட் எஃப்3 இல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ ஆகும். இதேபோல், பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் முதல் 6 மணி நேரங்கள் வரையில் ஆகும். சிறந்த பிரேக்கிங்கிற்காக டிரம் பிரேக் வசதியை முன் மற்றும் பின் வீலில் வழங்கப்பட்டு உள்ளது.

டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இதில் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றன. 12 அங்குல ட்யூப்லெஸ் டயரே இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து சிறந்த சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில அட்வான்டேஜ்களைக் கொண்டதாக இருக்கின்றது.

இதன் சார்ஜிங் சைக்கிள் 2,500 முறைகள் ஆகும். இதேபோல், 2 - 4 மடங்கு அதிக ஆயுட்காலத்தைக் கொண்டதாகவும் அந்த பேட்டரிகள் காட்சியளிக்கின்றன. இத்துடன், இருசக்கர வாகனத்தின் பக்கம் டூ-வீலர் பிரியர்களை ஈர்க்கும் விதமாக ஒகாயா நிறுவனம் 3 ஆண்டுகள் / 30 ஆயிரம் கிமீ வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மோட்டார் மற்றும் பேட்டரி இரண்டிற்கும் வாரண்டி காலம் இதுவாகும்.

ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை பலதரப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஹீரோ ஆப்டிமா சிஎக்ஸ், ஒகினாவா பிரைஸ் ப்ரோ மற்றும் ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் ஆகியவற்றிற்கே போட்டியாக அமைய இருக்கின்றது. இதுதவிர இன்னும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இதன் வருகை போட்டியாக அமைய இருக்கின்றது. குறிப்பாக, மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இது போட்டியாக இருக்கப் போகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 11:53 [IST]
English summary
Okaya faast f3 electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+