இந்த நாளில்தான் ஓலாவுக்கும், டிவிஎஸ்-க்கும் ஆப்பு வைக்க போறாங்க! ஃபார்ம்க்கு வந்த ஒகாயா!
ஒகாயா மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள் என்ன? மேலும், எந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது மற்றும் இதன் சிறப்பு வசதிகள் என்ன என்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா இவி-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் விரைவில் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை டீசர் படத்தின் வாயிலாக அந்நிறுவனமும் உறுதிப்படுத்தியது. ஆனால், அதன் வருகை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையிலேயே ஒகாயா நிறுவனம் தனது புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனைக்கான அறிமுக நாளை அறிவித்து இருக்கின்றது. வருகின்ற 17ஆம் தேதி அன்றே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
அன்றைய தினத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த ஒகாயா மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ முதல் 135 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ என கூறப்படுகின்றது. ஆனால், இதில் இடம் பெற இருக்கும் மோட்டார் பற்றிய முழுமையான விபரங்களை ஒகாயா வெளியிடவில்லை. ஆகையால், அது என்ன மாதிரியான திறனை வெளிப்படுத்தும் என்பதை துள்ளியமாக எங்களால் கூற முடியவில்லை.
அதேவேளையில், ஹப் வகை மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதை வைத்தே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மலிவு விலையில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உதவும் நோக்கிலேயே இந்த மின்சார ஸ்கூட்டரை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.
அதேவேளையில், இந்த வாகனத்தை வழக்கமான கம்யூட்டர் வாகனத்தைப் போல கடுமையான பயன்பாட்டிற்கும் உபயோகித்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த வாகனத்தால் 8 டிகிரி கிராடிபிளிட்டி திறனில் இயங்க முடியும். எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒகாயா பயன்படுத்தி இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். சையன், பிளாக், கிரீன், ரெட் மற்றும் கிரே ஆகியவையே அவை ஆகும். இந்த நிற தேர்வுகளில் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். அதேநேரத்தில், ட்யூப்லெஸ் டயர், அலாய் வீல் ஆகியவையும் ஒகாயா மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கின்றன.
இத்துடன், 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட திரை, எல்இடி லைட் மற்றும் எல்இடி இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட இருக்கின்றன. இதுதவிர, முன் வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக் வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. சஸ்பென்ஷனைப் பொருத்த வரை இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்றவையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்களுடனேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவைக் களம் காண இருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் சாலையை எதிர்காலத்தில் மின்சார வாகனங்களே ஆள இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் அதிக அளவில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, முன்னணி நிறுவனங்கள் பல மலிவு விலை மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








