Okinawa PraisePro And iPraise+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 8புதிய கலர் ஆப்ஷன்கள்! இந்த கலர் கூட இருக்குதா?

டில்லியை அடுத்த குர்கிராம் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் ஒகினவா, இந்நிறுவனம் விற்பனை செய்யும் பிரைஸ் எலெட்க்டரிக் ஸ்கூட்டர்களில் 8 புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிகமான கலர் தேர்வுகளை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஓகினாவா நிறுவனம் குறைந்த பெர்ஃபாமென்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். இந்நிறுவனம் பிரைஸ் என்ற பெயரில் பிரைஸ் ப்ரோ மற்றும் ஐபிரைஸ்+ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

Okinawa PraisePro And iPraise+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 8புதிய கலர் ஆப்ஷன்கள்! இந்த கலர் கூட இருக்குதா?

இந்த ஸ்கூட்டர்களில் ஏற்கனவே உள்ள கலர் ஆப்ஷன்கள் போக புதிதாக 8 கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் கிரீன், ஓஷன் ப்ளூ, மாவ் பர்பிள், லிக்யூட் மெட்டல், மிலிட்டரி கிரீன், மோச்சா பிரெளன், ஸீஃபோம் கிரீன், சன் ஆரஞ்ச் ஆகிய நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

மற்றபடி இந்த ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பிரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை எல்இடி லைட்டிங், ரி ஜெரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய இ-ஏபிஎஸ், டிஜிட்டல் கன்சோல், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஆகிய வசதிகள் இருக்கிறது.

Okinawa PraisePro And iPraise+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 8புதிய கலர் ஆப்ஷன்கள்! இந்த கலர் கூட இருக்குதா?

இந்த ஸ்கூட்டர் 3-4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும். அதிகபட்சமாக 56 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த பிரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு கி.மீ பயணிக்க வெறும் 14 பைசா தான் செலவாகும். இதுவே ஓகினாவா ஐபிரைஸ் பிளஸ் ஸ்கூட்டரைபொருத்தவரை முழு சார்ஜில் 137 கி.மீ ரேஞ்சை தரும்.

ஒகினாவா நிறுவனம் சமீபத்தில் தான் தனது 2.50 லட்சமாவது ஸ்கூட்டரை தயாரித்தது. இந்த சாதனையைச் செய்ய ஓகினாவா நிறுவனம் 6 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. இந்நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தான் முதன் முதலில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையைத் துவங்கியது. தற்போது இந்தியாவில் 540 கிளைகளை விரித்து தனது வியாபாரத்தை விஸ்தரித்துள்ளது.

ஒகினாவா நிறுவனத்தின் மீது மத்திய அரசு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அரசின் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்நிறுவனமும் இருக்கிறது. இந்த குற்றச்சாட்டு ஓகினாவா நிறுவனத்தின் மீது மட்டும் கிடையாது.

ஹீரோ எலெக்ட்ரிக், பென்லிங், ஒகாயா, ஜிஜேந்திரா நியூ இவி, கிரீவீஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, ரெவோல்ட் இன்டெல்லீகார்ப், ஏவான் சைக்கிள்ஸ், லோஹியா ஆட்டோ, கைனடிக் கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 28, 2023, 18:30 [IST]
English summary
Okinawa praisepro and ipraise plus electric scooter get 8 new colour options
மேலும்... #ஒகினவா #okinawa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+