ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 10 ஆயிரம் ரூபா டிஸ்கவுண்ட்.. இப்பவே வாங்கினாதான் உண்டு.. சீக்கிரமே முடிய போகுது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பும் நபர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக சூப்பர் ஆஃபரை ஓலா அறிவித்து உள்ளது. பெரும் தொகையை கேஷ் டிஸ்கவுண்டாக வழங்க இருப்பதாகவே நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இது பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கே நிறுவனம் தற்போது ஆஃபரை அறிவித்து இருக்கின்றது. ஓலா நிறுவனம் தற்போதைய நிலவரப்படி எஸ்1 ஏர் (Ola S1 Air), எஸ்1 ( (Ola S1) மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய மூன்று விதமான மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Ola S1 Pro Available With Cash Discount

இவற்றில் எஸ்1 ப்ரோ மாடலுக்கே ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மட்டுமே ஆஃபர் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாடலின் விலையில் ரூ. 10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இது ஓர் லிமிடெட் ஆஃபர் ஆகும்.

இன்றும் (மார்ச் 30), நாளையும் மட்டுமே இந்த ஆஃபரில் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். 12-க்கும் மேற்பட்ட நிற தேர்வில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட மாடலாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது.

Ola S1 Pro Available With Cash Discount

ஆகையால், நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும்ஓலா எஸ்1 ப்ரோவே இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 181 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு 116 கிமீ ஆகும். மேலும், இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை இந்த ஸ்கூட்டர் எட்டிவிடும்.

இத்தகைய சூப்பர் திறன் கொண்ட தேர்வே ஓலா எஸ்1 ப்ரோ ஆகும். இதில், ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைபர் ஆகிய மோட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், ஈகோ மோடில் பயணித்தால் மட்டுமே நிறுவனம் உறுதி அளித்த அதிகபட்ச ரேஞ்ஜை நம்மால் பெற முடியும்.

Ola S1 Pro Available With Cash Discount

வேறு மோட்களில் பயணிக்கும்போது குறைவான ரேஞ்ஜ் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, அதிக வேகத்தில் ஸ்கூட்டரை இயக்கினால் ரேஞ்ஜ் கிடைப்பதில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். முன்னதாக கூறியதைபோல் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட மாடலாக ஓலா எஸ்1 ப்ரோ மாடல் இருக்கின்றது.

க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை, எல்இடி லைட்டுகள் என எக்கசக்க அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய வாகனத்தின் பக்கமே மின் வாகன பிரியர்களை ஈர்க்கும் விதமாக ஓலா ஆஃபரை அறிவித்து இருக்கின்றது. இந்த திடீர் ஆஃபருக்கான வேறு எந்த காரணத்தையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

ஓலா நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கார்களில் வழங்கப்பட கூடிய அடாஸ் அம்சத்தை வழங்கும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அம்சம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் எனில், உலகின் முதல் அடாஸ் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் என்கிற புகழ் ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கு வந்து சேரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

அடாஸ் என்பது நவீன கால பாதுகாப்பு அம்சம் ஆகும். இது தானாக பிரேக் பிடித்தல், வேகத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை செய்யும் திறன் கொண்டது. இந்த அம்சம் இப்போதைய நிலவரப்படி அதிக விலைக் கொண்ட ஆடம்பர கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, ஓலா தன்னுடை இருசக்கர வாகனத்தில் அடாஸ் டெக்னாலஜியை வழங்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 30, 2023, 20:09 [IST]
English summary
Ola announced cash discount offer for s1 pro
மேலும்... #ஓலா #ola #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+