இந்த டிசம்பரை யாராலும் மறக்க முடியாது.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்த ஓலா..

இந்தியாவின் மாபெரும் மின்சார இருசக்கர (Electric Two-Wheeler) வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் (Ola Elctric) நிறுவனம். இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அந்நிறுவனம் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை ஒன்றை எடுத்து இருக்கின்றது.

அதாவது, தன்னுடைய புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகன மாடல் ஒன்றின் விலையை மிக மிகக் கடுமையாக குறைத்து அது நடவடிக்கை எடுத்து இருக்கின்றது. அது எந்த மாடல்? அதன் விலை எவ்வளவு குறைக்கப்பட்டு இருக்கின்றது? மேலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள் என்ன? என்பதுபோன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Ola s1 x plus

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Elctric), 'டிசம்பர் டூ ரிமெம்பர்' (December to Remember) எனும் திட்டத்தின்கீழே விலை குறைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. அதாவது, இந்தியர்கள் யாரும் இந்த 2023 டிசம்பரை மறக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் தன்னுடைய முன்னணி மின்சார இருசக்கர வாகன மாடலின் விலையைக் குறைத்திருக்கின்றது.

எஸ்1 எக்ஸ்-பிளஸ் (S1 X+) தேர்வின் விலையையே அது நம்ப முடியாத அளவிற்குக் குறைத்திருக்கின்றது. ரூ. 20 ஆயிரம் வரை அதன் விலையில் குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 89,999 ஆக மாறி இருக்கின்றது.

Ola price cut

இந்த விலை குறைந்திருப்பதால் நிறுவனத்தின் மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும் எஸ்1 எக்ஸ்-பிளஸ் மாறி இருக்கின்றது. நிறுவனத்தின் மிக மிக சிறந்த தயாரிப்பாக எஸ்1 எக்ஸ்-பிளஸ் காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை பலர் 'டாப்நாட்ச்' இ-ஸ்கூட்டர் என கூறி வருகின்றனர்.

சிறப்பம்சம் தொடங்கி திறனை வெளிப்படுத்து வரை என அனைத்திலும் கை தேர்ந்த தயாரிப்பாக அது காட்சியளிக்கின்றது. ஓலா நிறுவனம் இந்த தேர்வில் 3kWh பேட்டரி பேக் தேர்வையே வழங்குகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 151 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

மேலும், 6 kW திறன் கொண்ட மின்சார மோட்டாரே எஸ்1 எக்ஸ்-பிளஸ் தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். இத்துடன், இதனால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும் எட்ட முடியும்.

இத்தகைய பன்முக சிறப்புகள் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே எஸ்1 எக்ஸ்-பிளஸ் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டரில் சிறப்பம்சங்களாக 5 அங்குல திரை, சாவியில்லாமல் பயணிக்கும் வசதி, ஸ்மார்ட் இணைப்பு என ஏகப்பட்ட அம்சங்களை எஸ்1 எக்ஸ்-பிளஸ் தேர்வில் ஓலா வழங்கி இருக்கின்றது.

விலை குறைப்பிற்கு முன்னதாக இதே தேர்வு ரூ. 1.09 லட்சம் என்கிற விலையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தை பன்முக நிறத்தால் ஓலா அலங்கரித்திருக்கின்றது. அத்துடன், 34 லிட்டர் பூட் ஸ்பேஸ், நேவேகேஷன், அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி மற்றும் ரிவர்ஸ் உள்ளிட்ட வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் அறிவிக்கப்படாத, அதாவது, மகுடம் சூடப்படாத மன்னனாக ஓலா எலெக்ட்ரிக் மாறி இருக்கின்றது. இதற்கு சான்றாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் ஓலா நிறுவனம் எஸ்1 எக்ஸ் பிளஸ் தேர்வின் விலையை தற்போது மிகப் பெரிய அளவில் குறைத்திருக்கின்றது. இந்த சிறப்பு சலுகை இந்த மாதம் இறுதி வரை மட்டுமே எனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. அதாவது, 'டிசம்பர் டூ ரிமெம்பர்' திட்டத்தின் கால அவகாசம் பற்றிய தகவலை அது வெளியிடவில்லை. சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஜிம்னி மாடலின் விலையை ரூ. 1 லட்சம் தொடங்கி ரூ. 2 லட்சம் வரை குறைப்பு செய்தது. இந்த நிலையிலேயே ஓலா-வும் முக்கிய தயாரிப்பின் விலையைக் குறைத்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 2, 2023, 20:54 [IST]
English summary
Ola announced price cut s1 x plus electric scooter here is more details
மேலும்... #ஓலா #ola #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+