ஆஃபர் விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கணுமா? இதுவே சரியான நேரம்.. முந்திக்கோங்க, சீக்கிரமே முடியபோகுது!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர்களின் பக்கம் கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில சிறப்பு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகியவற்றிற்கே சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கால் டாக்சி துறையில் கொடி கட்டி பறக்கும் ஓலா நிறுவனம் இப்போது இந்தியாவில் மின்வாகன சந்தையையும் ஆள தொடங்கி இருக்கின்றது. இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் எஸ்1 ஏர், எஸ் 1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஓலா

இவற்றிற்கு இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது. எஸ்1 தேர்விற்கு ரூ. 2 ஆயிரம் வரையிலும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது சிறப்பு ஆஃபராக எக்ஸ்சேஞ்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஹோலி மற்றும் பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த சலுகைகளை ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கின்றது. ஆகையால், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

ஓலா

இன்று (மார்ச் 8) தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின்கீழ் எந்தவொரு டூ-வீலரையும் மாற்றிக் கொள்ள முடியும். பெட்ரோலில் ஓட கூடிய டூ-வீலர்களையும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆக்டிவா, ஜுபிடர், ஃபஸ்ஸினோ என எதையும் எக்ஸ்சேஞ்ஜின்கீழ் மாற்றிக்க முடியும். ஓலா எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் வாயிலாக ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ. 6,999 வரை சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளுடன் சேர்த்து கூடுதல் சிறப்பு சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓலா

நிறுவனத்தின் சிறப்பு சேவையான ஓலா கேர் பிளஸ் சந்தாவிற்கு 50 சதவீதம் வரை சலுகை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் இந்த வாரத்துடன் முடுவுற இருக்கின்றது. மேலும், கூட்டப்பட்ட வாரண்டியையும் சலுகையில் வழங்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ஓலா நிறுவனம் ஓலா கேர் எனும் ஓலா கேர் பிளஸ் எனும் இரு திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கின்றது.

முதல் ஒன்றின்கீழ் லேபர் சார்ஜ் இல்லாமல் சர்வீஸ் வழங்குகள், திருட்டின் போது உதவுதல், ரோடு சைடு அசிஸ்டன் மற்றும் பஞ்சர் அசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஓலா கேர் பிளஸ்கீழ் முன்னதாக பார்த்த திட்டங்களுடன் சேர்த்து கூடுதல் சில சிறப்பு சேவைகளும் வழங்கப்படும்.

ஓலா

சர்வீஸின்போது இலவசமாக வாகனங்களை பிக் மற்றும் டிராப் செய்தல், 24X7 டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை, வாகனத்தில் வருடாந்திர சிறப்பு ஆய்வு உள்ளிட்ட சேவைகளே கூடுதலாக வழங்கப்படுகின்றன. இந்த சேவைக்கே சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் சலுகைகள் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலை மாடலான எஸ்1 ஏர்க்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. இதன் விலை ரூ. 91,754 ஆகும். இருப்பதிலேயே மிக மிக விலை குறைவான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த மாடல் இருக்கின்றது. இதனை மூன்று விதமான பேட்டரி தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது ஓலா. இதில், ஓர் முழு சார்ஜில் அதிகபட்சமாக 169 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2023, 17:39 [IST]
English summary
Ola announces limited period special offers s1 s1 pro
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X