தமிழ்நாட்டுக்கே இதனால பெருமைங்க! கிருஷ்ணகிரியை ஓலா விடாது போலயே... மற்றுமொரு பிரம்மாண்ட தொழிற்சாலை!!
இந்தியாவின் மிக பெரிய பேட்டரி தொழிற்சாலையை நிறுவுவதற்கான வேலைகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த தொழிற்சாலை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி & விற்பனையில் இறங்கியதில் இருந்து பல்வேறு விதமான ஸ்டாண்டர்ட்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அமைத்து வருகிறது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் பணியாற்றுப்பவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

இதன் மூலமாக இந்தியாவில் அதிக பெண் தொழிலாளர்களுடன் இயங்கும் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையாக ஓலாவின் தொழிற்சாலை புகழப்பட்டு வரும் நிலையில், இந்த புகழ்ச்சியை எல்லாம் ஒரு காதில் வாங்கிக்கொண்டு தன்னுடைய பேட்டரி தொழிற்சாலையை 'ஜிகா ஃபேக்ட்ரி' என்ற பெயரில் நிறுவ ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் மிக பெரிய பேட்டரி தொழிற்சாலையாக உருவாக்கப்படும் இதனை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வும், துணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் சமீபத்தில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது எடுக்கப்பட்ட படங்களையும், வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "எங்களது செல் ஜிகா ஃபேக்ட்ரியில் வேலை தொடங்கியது மற்றும் பணிகள் வேகமாக நடக்கிறது!
Work started and moving along at full speed on our cell gigafactory!
— Bhavish Aggarwal (@bhash) May 26, 2023
It will be India’s biggest and amongst the worlds biggest cell factories. And the centrepiece for #endICEage! pic.twitter.com/Nr6k5rMT6O
இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மிகப்பெரிய செல் தொழிற்சாலைகளில் ஒன்றாகவும், #எண்ட் ஐஸ் ஏஜ்-இன் மையப்பகுதி ஆகவும் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். ஜிகா ஃபேக்ட்ரி என இந்த தொழிற்சாலை அழைக்கப்படுவதற்கு காரணம், நிறுவப்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 10 ஜிகாவாட்-ஹவர் திறன் கொண்ட மின்கலன்களை (பேட்டரி) தயாரிக்க முடியும் என்கிறது ஓலா எலக்ட்ரிக்.
இங்கு உருவாக்கப்பட உள்ள பேட்டரிகள் எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படுவது மட்டுமின்றி, மற்ற பேட்டரி தேவைகளையும் தீர்க்கும். இந்தியாவில் இதுவரையில் பெரிய அளவில் எந்த பேட்டரி தொழிற்சாலையும் இல்லை. இதனாலேயே எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்கள் பேட்டரிகளுக்காகவே சீனா, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்கின்றன.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மட்டுமின்றி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இந்தியாவில் பேட்டரி தொழிசாலையை நிறுவ விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் முதல்முறையாக பேட்டரியை சொந்தமாக உற்பத்தி செய்த நிறுவனம் லாக்9 மெட்டீரியல்ஸ் என்ற பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். ஆனால் லாக்9 -இன் மொத்த உற்பத்தி திறன் வருடத்திற்கு 50 மெகாவாட்-ஹவர் மட்டுமே.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மெகாவாட்களில் இல்லாமல், வருடத்திற்கு ஜிகாவாட்ஸ் திறன் கொள்ளளவில் பேட்டரியை உருவாக்கக்கூடிய தொழிற்சாலை இருப்பது நிறுவும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் நல்லது. ஏனெனில் இதன் வாயிலாக, இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியது இருக்காது. இருப்பினும், ஓலாவின் ஜிகா ஃபேக்ட்ரி கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட இன்னும் சில வருடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








