தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிட்டு வாங்க! இப்ப ஆஃபர் அதிகமா கொடுக்குறாங்க!
ஓலா நிறுவனம் பாரத் இவி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி நீட்டிக்கப்பட்ட வாரண்டி, இலவச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ரெபரல் போனஸ் என பல்வேறு புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா நிறுவனம் பாரத் இவி ஃபெஸ்ட் நிகழ்ச்சியை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு பல்வேறு ஆபர்களை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் வாகனத்தை வாங்குபவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை பெறுவதில் சலுகை, வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்தவர்களுக்கு இலவச ஸ்கூட்டரை பெறும் வாய்ப்பு, உள்ளிட்ட ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இது குறித்து ஒவ்வொன்றாக காணலாம் வாருங்கள்.

தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை பெறுவதற்கு 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. மேலும் ஒலா எஸ் ஒன் ப்ரோ இரண்டாம் தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்த வாடிக்கையாளர்களில் அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து அவருக்கு ஓலா எஸ்1 எக்ஸ்பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய வாடிக்கையாளர் தனது நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கோ தனக்கு தெரிந்தவர்களுக்கோ ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க பரிந்துரை செய்தால் அந்த வாடிக்கையாளருக்கு ரூபாய் 2000 ஒவ்வொரு பரிந்துரைக்கும் பரிந்துரை செய்பவருக்கு கிடைக்கும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தள்ளுபடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் ஐந்தாண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை அறிவித்துள்ளது. எக்ஸ்சேஞ்ச் ஆஃராக ரூபாய் 10,000 சில கிரெடிட் கார்டுகள் மூலம் இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால் உடனடியாக ரூபாய் 7500 தள்ளுபடி வழங்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னரே சொன்னபடி நீட்டிக்கப்பட்ட வாரண்டியை 50 சதவீத தள்ளுபடி பெற்றுக்கொள்ள முடியும்.
ஓலா நிறுவனம் தற்போது 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. எஸ்1 ப்ரோ 2ம்தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. எஸ்1 ஏர் நடுவில் உள்ள ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது. இதுபோக எக்ஸ்1 எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்1 ப்ரோ முதல் தலைமுறை ஸ்கூட்டர் ஆகியன விற்பனையாகி வருகிறது. s1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
ஓலா நிறுவனம் தற்போது இரண்டாம் தலைமுறையாக தனது பிளாட்பார்மை அப்டேட் செய்து அதில் புதிய ஸ்கூட்டர்களை தயார் செய்து வருகிறது. மேலும் இதன் எலெக்ட்ரிக் மோட்டாரில் ஹீட்சிங் மற்றும் மோட்டார் கண்ட்ரோல் யூனிட் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மேலும் பேட்டரி பேக் தெர்மல் பெர்பாமன்ஸ் மற்றும் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டத்திற்காக அப்டேட் செய்யப்பட்டு மறுபடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அதன் பாகங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்குவதுக்காக எடுத்துக் கொள்ளும் மின் சக்தியின் அளவு குறைந்துள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரின் எடையும் குறைந்துள்ளது. புதிய அப்டேட்டில் இந்த ஸ்கூட்டரின் ஃபிரேம் எடை குறைவாகவும் அதே நேரம் ஸ்ட்ராங்காகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனம் தற்போது தனது மூவ் ஒஎறா் நான்காவது தலைமுறை ஓஎஸ்யை பீட்டா வெர்ஷனாக தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இது பீட்டா வெர்ஷனில் இருந்து முழு வெர்ஷனாக மாறி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட் பல புதிய அம்சங்களை கொண்ட சிறப்பான ஸ்கூட்டராக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாற்றியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒலா நிறுவனம் தற்போது இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில் பண்டிகை கால விற்பனை வளர்ச்சியை கொண்டு வர இப்படியான ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த தீபாவளியை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கொண்டாட இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








