ஓலா ஸ்கூட்டர் ஓட்டி 9 மாதத்தில் ரூ1 லட்சம் சேமித்த சோமாட்டோ டெலிவரி பாய்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியதிலிருந்தே ஏராளமான மக்கள் இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டனர். இப்படியாக தற்போது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற இடத்தை பிடித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்துவதால் பெட்ரோல் செலவை வெகுவாக மிச்சப்படுத்த முடியும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் ஒட்டு மொத்த செலவைக் கணக்கிட்டால் பெட்ரோல் ஸ்கூட்டரை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிகம் செலவாகிறது என்ற விவாதமும் நடந்து வருகிறது. இப்படியாகச் சூழ்நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் செய்த ட்வீட் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

இவர் சமீபத்தில் பெங்களூருவில் சாலை சென்று கொண்டிருந்த போது சோமாட்டோ டெலிவரி பாய் ஒருவரைச் சந்தித்துள்ளார். அவருடன் இவர் இவர் பேசியபோது கிடைத்த ஒரு தகவலைத் தான் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டில் அவர் டிராஃபிக்கில் சந்தோஷ் என்பதை சந்தித்ததாகவும் அவர் 2 ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வைத்திருப்பதாகவும்,
அவர் அதில் சுமார் 50 ஆயிரம் கி.மீ வரை இது பயணம் செய்ததில் ரூ1 லட்சம் வரை பணத்தை மிச்சம் செய்துள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரிடம் உள்ள 2 ஸ்கூட்டரில் ஒரு ஸ்கூட்டரை ஹைப்பர் ஸ்டேஷனில் சார்ஜ் போட்டுவிட்டு அடுத்த ஸ்கூட்டரை ஓட்டி டெலிவரி பணிகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தோஷ் ஓலா ஸ்கூட்டருக்கு மாறிய பிறகு கடந்த 9 மாதங்களில் மொத்தம் ரூ1 லட்சம் வரை மிச்சம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு பணம் மிச்சமாகிறது என்றால் பெட்ரோல் ஸ்கூட்டரை விட
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறந்தது என்ற எண்ணம் தோன்றுகிறது.
தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லாபமாக இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாகப் பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு இந்த ரக ஸ்கூட்டர் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ட்வீட்டிற்கு பிறகு ஓலா ஸ்கூட்டரின் விற்பனை மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஓலா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் தனது மூவ் ஓஎஸ்3 அப்டேட்டை வெளியிட்டது. அதில் புதிதாக 50 அம்சங்கள், ஹைப்பர் சார்ஜிங் அப்டேட் போன்ற விஷயங்கள் வழங்கப்பட்டது. ஹைப்பர் சார்ஜிங்கில் 15 நிமிடத்தில் ஸ்கூட்டரை சார்ஜ் செய்துவிடலாம். இது போக ஹில் அசிஸ்ட்,புராக்ஸிமிட்டி அன்லாக் ஆகிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








