ஓலா ஸ்கூட்டர்ல இப்படி ஒரு டெக்னாலஜி வரப்போகுதா? இனி இந்த ஸ்கூட்டர் விபத்துலேயே சிக்காது போலயே!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைப் பெற்று வரும் நிறுவனம். தற்போது இந்தியாவிலேயே அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் அது ஓலா தான். இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மேம்படுத்தும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கிறது. மற்றொரு புறம் எலெக்ட்ரிக் காரை தயாரிக்கும் முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குக்களையும் தயாரித்து வருகிறது.

ஓலா ஸ்கூட்டர்ல இப்படி ஒரு டெக்னாலஜி வரப்போகுதா? இனி இந்த ஸ்கூட்டர் விபத்துலேயே சிக்காது போலயே!

இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது அந்நிறுவனத்திற்கென புதிய அடாஸ் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்நிறுவனம் சிஇஓ வான பவீஷ் அகர்வால் ஒரு வீடியோ ஒன்றைச் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஓலா ஸ்கூட்டரில் ஒரு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அதன் ஸ்கிரினில் முன்னே போகும் வாகனத்தின் டிஸ்பிளே தெரிகிறது. அதில் சாலையின் வடிவம் மற்றும் முன்பக்கம் செல்லும் வாகனம் குறித்த தகவல்கள் தானாகப் பகுப்பாய்வு செய்கிறது. இதைப் பார்க்கும் போது கேமரா மூலம் இயங்கும் அடாஸ் தொழிற்நுட்பம் போலத் தெரிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த அவர் இது குறித்த டெக் டெமோவை விரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்க்கும் போது அடாப்டிப் க்ரூஸ் கண்ட்ரோல் கருவி போல தோற்றமளிக்கிறது. அடாப்டிக் க்ரூஸ் கண்ட்ரோல் கருவி என்றால் வாகனம் குறிப்பிட்ட ஸ்பீடில் செல்லும் போது அதை ஆன் செய்துவிட்டால் வாகனம் அதே ஸ்பீடில் டிரைவரின் இயக்கம் இல்லாமல் பயணிக்கும். அதுவே எதிரில் வாகனம் சென்றால் அதன் வேகத்தைப் பார்த்து இந்த வாகனமும் வேகத்தைக் குறைத்துக் கூட்டிக்கொள்ளும்.

இந்த கருவி ரேடாரை அடிப்படையாகக் கொண்டும், கேமராவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் திறன் கொண்டது. இந்த டெக்னாலஜி பெரும்பாலும் ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், போன்ற கார்களில் இருக்கிறது. பைக்குகளை பொருத்தவரை விலையுயர்ந்த பைக்குகளில் இருக்கிறது.

டுகாட்டி மல்டி ஸ்டார்டா வி4, பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி, கேடிஎம் சூப்பர் அட்வெஞ்சர் ஆர் உள்ளிட்டபடி பைக்குகளில் இருக்கிறது. இந்த தொழிற்நுட்பத்தை ஓலா நிறுவனம் ஓலா ஸ்கூட்டரில் டெஸ்ட் செய்து வருவதைப் பார்த்தால் இதை ஓலா ஸ்கூட்டரில் ஒரு அம்சமாகக் கொடுக்க அந்நிறுவனம் முயன்று வரலாம் எனக் கணிக்கப்படுகிறது.

ஆனால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இது எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது தெரியவில்லை. இந்த தொழிற்நுட்பம் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கானது தான். ஓலா ஸ்கூட்டரின் அதிகபட்ச ரேஞ்ச்141 கி.மீ தான். மேலும் இந்த ஸ்கூட்டர் பெரும்பாலும் 40 கி.மீ வேகத்தில் தான் பயணிக்கும். அதுவும் கூட்ட நெரிசல் மிக்க ரோடுகளில் தான் பயணிக்கும்.

அப்படிப் பார்த்தால் இது ஓலா ஸ்கூட்டருக்கு ஒத்து வராது. அப்படியே இந்த தொழிற்நுட்பத்தை மாற்றி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பொருந்துகிறது போல செட் செய்து ஓலா நிறுவனம் வெளியிட்டால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் கொண்ட ஸ்கூட்டர் ஓலாவாக தான் இருக்கும்.

இது உண்மையா பொய்யா என் தகவல் எல்லாம் தெரியவில்லை. ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவீஷ் அகர்வால் ட்வீட் செய்தபடி அவரை இந்த டெக்னாலஜியின் டெமோவை வெளிட்டால் தான் எல்லாம் நமக்குப் புரிய வரும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 12:40 [IST]
English summary
Ola CEO shared a video may be it their own adas tech knows the full details
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+