Ola Concert Mode: இனி பப் எல்லாம் காத்து வாங்க போகுது! ஓலா ஸ்கூட்டர் பார்ட்டி மோடில் செம அப்டேட் வரப்போகுது

ஓலா நிறுவனம் தனது மூவ் ஒஸ் என்ற சாஃப்ட்வேரில் 4வது அப்கிரேடை வழங்கத் தயாராகி வருகிறது. அந்த அப்டேட்டில் பல புதிய அம்சங்கள் இந்த ஸ்கூட்டருக்கு கிடைக்கப்போகிறது. அதில் ஒரு முக்கியமான அம்சம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்நிறுவனம் தனது ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தனது சாஃப்ட்வேரை அவ்வப்போது இந்நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது.

Ola Concert Mode

சமீபத்தில் மூவ் ஓஎஸ் 3 அப்டேட்டை வெளியிட்டது. இதில் பல புதிய அம்சங்கள் இடம் பெற்றன. இந்நிலையில் அடுத்ததாக இந்நிறுவனம் மூவ் ஓஎஸ் 4 அப்கிரேடை வழங்கத் தயாராகி வருகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் : "உங்களுக்கு இந்த அம்சம் வேண்டுமா? பார்ட்டி மோடிற்கு பிறகு, தற்போது கான்செர்ட் மோட் வருகிறது. இந்த வீடியோ ஓலா ஃபேக்டரில் எடுக்கப்பட்டது." எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவில் வரிசையாக ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவை பாடலுக்கு ஏற்ப லைட்டை மாறி மாறி ஒளிர விட்டது.

Ola Concert Mode 2

இந்த வீடியோவில் இறுதியில் பார்ட்டி மோட்டிற்குப் பிறகு கான்செர்ட் மோட் வருகிறது. அது மூவ் ஓ எஸ் 4ல் வரப்போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஓலா மூவ் ஓஎஸ்3ல் பார்ட்டி மோட் என்ற ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டிருந்தது. அதன்படி பைக்கில் ஓடும் பாடலுக்கு ஏற்ப ஸ்கூட்டரில் உள்ள லைட்டுகள் மாறி மாறி எரியும்.

தற்போது ஓலா நிறுவனம் கொண்டுவரப்போகும் கான்செர்ட் மோட் என்பது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை ஒரே இடத்தில் நிறுத்தி அதை இணைத்து அதன் மூலம் ப்ளே செய்யப்படும் பாடல்களுக்கு ஏற்ப வாகனங்கள் ஒன்று சேர்ந்து லைட்டை மாற்றி மாற்றி ஒளிர விடும். இது தனியாக ஒளிர விடுவது போல் அல்லாமல் சேர்ந்து ஒளிர்ந்தால் எப்படி இருக்கவேண்டுமே அப்படி ஒளிரும்.

Ola Concert Mode 3

சமீபத்தில் இப்படியாக டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை வரிசையாக நிறுத்தி ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு லைட்களை ஒளிர விட்டனர். இந்த வீடியோ வைரலாகியது. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு அம்சத்தைத் தான் ஓலாவும் தனது ஸ்கூட்டரில் அறிமுகப்படுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஒரு அப்டேட் மட்டுமல்ல மூவ் ஓஎஸ்4 அப்டேட்டில் மேலும் பல முக்கியமான அப்டேட்கள் வரவுள்ளது. குறிப்பாக ஓலா நிறுவனத்தின் சொந்த நேவிகேஷன் மேப் வரவுள்ளது. இந்த மேப் சமீபத்தில் டெஸ்ட் செய்ததைப் பார்க்க முடிந்தது. இது எல்லாம் விரைவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்குக் கிடைக்கப்போகிறது.

மூவ் ஓஎஸ் 4 அப்டேட்டை பொருத்தவரை ஓலா நிறுவனத்தின் 4வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இதற்கு முன்னர் மூவ் ஓஎஸ் 3 அப்டேட்டை வெளியிட்டது. அப்பொழுது இந்த ஸ்கூட்டர் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படும் போது கூறப்பட்ட பல அம்சங்கள் ஸ்கூட்டரில் இல்லாமல் இருந்தது அது எல்லாம் வந்தது.

தற்போது புதிய புதிய அப்டேட்கள் எல்லாம் வரவுள்ளது. இந்த அப்டேட் எப்பொழுது முதல் ஓலா ஸ்கூட்டர் ஓனர்களுக்கு கிடைக்கும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலாவின் இந்த புதிய அப்டேட் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 12:40 [IST]
English summary
Ola confirms concert mode on move os 4 update
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+