திடீர்னு பல்டி அடிச்சுட்டாங்க! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக்கிங் செய்தவர்களுக்கு அதிர்ச்சி

ஓலா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த புதிய பேட்டரி ஆப்ஷன்களை தற்போது நிறுத்தியுள்ளது. போதுமான வரவேற்பு கிடைக்காததால் இந்த முடிவை ஓலா நிறுவனம் எடுத்துள்ளது. நீக்கப்பட்ட பேட்டரி ஆப்ஷன்களை புக் செய்தவர்களுக்கு மாற்று வழியையும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓலா நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பல்வேறு பேட்டரி ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி இந்த ஸ்கூட்டர்கள் 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி, 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி, 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி என்ன மூன்று ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது.

ola battery discontinued

இதற்கான புக்கிங்களையும் செய்து வந்தது. இந்நிலையில் 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி மற்றும் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆகிய பேட்டரி ஆப்ஷன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் போதுமான வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஓலா நிறுவனம் இந்த பேட்டரி ஆப்ஷன்களை தற்போது நிறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

இதனால் இனி ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பவரில் மட்டுமே விற்பனைக்கு வரும். மற்ற இரண்டு பேட்டரி ஆப்ஷன்களும் இனி வாங்க முடியாது. ஏற்கனவே இந்த இரண்டு கிலோ வாட் ஹவர் மற்றும் கிலோ வாட் அவர் பேட்டரி பேக் கொண்ட வாகனங்களை புக் செய்தவர்களுக்கு மாற்று வழியையும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

ola battery discontinued

அதன்படி ஏற்கனவே புக் செய்தவர்கள் தங்கள் புக்கிங்கை 3 கிலோ வாட் அவர் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்காக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அப்படி அவர்கள் மாற்றிக் கொண்டால் அவர்கள் 3 கிலோ வாட் அவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது ரூ. 6999 மதிப்பிலான எக்ஸ்டெண்டெட் பேட்டரி வாரண்டியை ஓலா நிறுவனம் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேநேரம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மூன்று கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டாம் என நினைத்தால் அவர்கள் தங்களது புக்கிங்கை கேன்சல் செய்து கொள்ளலாம். அப்படி கேன்சல் செய்தால் அவர்கள் புக்கிங் செய்யும்போது கொடுத்த முன் பணம் முழுவதையும் ஓலா நிறுவனம் திரும்ப வழங்கி விடும் என அறிவித்துள்ளது.

தற்போது ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழக்கம்போல 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் விற்பனையாகி வருகிறது.

விலையைப் பொறுத்தவரை தற்போது ஓலா எஸ் ஒன் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ1,09,999 என்ற விலையிலும் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ1,29,999 என்ற விலையிலும், ஓலா எஸ் ஒன் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ1,39,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த ஓலா எஸ்1 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் 450 எக்ஸ், டிவிஎஸ் ஐகியூப், பஜாஜ் சேதக், ஹீரோ விடா வி1 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் இந்த முடிவை மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பில்லை என்பதற்காக எடுத்துள்ளது. ஏற்கனவே புக் செய்துள்ளவர்களுக்கு அதை மாற்றவோ அல்லது கேன்சல் செய்யவோ ஆப்ஷன் வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் நீக்கப்பட்ட இந்த பேட்டரி ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தகூட வாய்ப்புகள் இருக்கிறது. என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 9, 2023, 17:16 [IST]
English summary
Ola discontinued 2kwh and 4 kwh battery option in s1 and s1 air
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+