எஸ்1 ப்ரோ-வின் விலையை கடுமையாக குறைத்த ஓலா.. எவ்வளவு தெரிஞ்சா இப்போவே ஒரு ஆர்டர போட்ருவீங்க!
ஓலா எலெக்ட்ரிக் அதன் பிரபல ஸ்கூட்டர் மாடலான எஸ்1 ப்ரோவின் விலையை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு வரை விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது?, எத்தனை நாட்களுக்கு இந்த விலை குறைப்பு சலுகை வழங்கப்படும்? உள்ளிட்ட விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் எஸ்1 ப்ரோ (Ola S1 Pro)-வும் ஒன்றாகும். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இதுவே இருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையளர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டே ஓலா நிறுவனம் எஸ்1 ப்ரோ-விற்கு மட்டும் விலை குறைப்பை அறிவித்திருக்கின்றது.

ரூ. 8 ஆயிரம் வரை விலையை குறைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறைப்பின் காரணமாக ரூ. 1,24,999-ஆக எஸ்1 ப்ரோவின் விலை குறைந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
ஆனால், இது குறைந்த கால சலுகை திட்டம் ஆகும். ஆமாங்க, இன்னும் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே இந்த சலுகை விலையில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை மட்டுமே இச்சலுகை விலையில் ஓலா எஸ்1 ப்ரோவை வாங்கிக் கொள்ள முடியும்.

கடந்த சில வாரங்களாகவே ஓலா அதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், சென்ற 2022-23 நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவிற்கு சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
எஸ்1 மாடலுக்கு ரூ. 2 ஆயிரமும், எஸ்1 ப்ரோவிற்கு ரூ. 4 ஆயிரமும் விலை குறைப்பு செய்யப்பட்டது. இந்த சலுகை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடைசியாக மார்ச் மாத இறுதியில், அதாவது, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் எஸ்1 ப்ரோ மாடலுக்கு மட்டும் சலுகை விலை அறிவிக்கப்பட்டது.

ரூ. 10 ஆயிரம் விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய நிதியாண்டையும் அலங்கரிக்கும் விதமாக ஓலா தற்போது எஸ்1 ப்ரோ மாடலுக்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் வரவேற்பு பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக 2023 மார்ச் மாதத்தில் மட்டும் 27 ஆயிரம் யூனிட் ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஒட்டுமொத்த மார்க்கெட்டில் 30 சதவீத பங்கு இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அமோக வரவேற்பையே 2022-23 நிதியாண்டின் இறுதியில் ஓலா பெற்றிருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்குறித்து ஒரு பக்கம் சர்ச்சையான தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் சஸ்பென்ஷன் எளிதில் நொறுங்குவதாகவும், நிறுவனம் சொன்னபடி ரேஞ்ஜ் தருவதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. மேலும், சில தொழில்நுட்ப கோளாறுகளும் அவ்வப்போது ஓலா மின்சார இருசக்கரவாகனங்களில் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், பலர் ஓலா மின்சார ஸ்கூட்டர்களை வாங்கிய வண்ணம் இருக்கின்றனர். இதற்கு அந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் நவீன தொழில்நுட்ப கருவிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேவேளையில், நிறுவனம் இந்தியர்களின் நம்பிக்கையப் பெறும் விதமாக குறிப்பிட்ட சில முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை அது தீவிரப்படுத்தி இருக்கின்றது. இதன் விளைவாகவும் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதுதவிர, அடுத்தடுத்து என புதுமுக தயாரிப்புகளையும் அது விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
பைக் மற்றும் கார் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை ஓலா வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுதவிர, புதிய 2KWh, 3KWh மற்றும் 4KWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளையும் ஓலா எலெக்ட்ரிக் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இந்திய மின் வாகன உலகின் தலைவனாக வருங்காலங்களில் ஓலா எலெக்ட்ரிக் உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









