அடுத்தடுத்துனு 5 எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்க போகுது ஓலா... எல்லாரும் துண்ட காணோம், துணிய காணோம்னு ஓட போறாங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியைத் தொடர்ந்து மின்சார பைக்குகளையும் உருவாக்கும் பணியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தை அது வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இப்போதைய நிலவரப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையையே வெகு விரைவில் ஓலா மாற்ற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆமாங்க, வெகு விரைவில் மின்சார பைக்குகளை உற்பத்தி செய்யும் பணியிலும் ஓலா எலெக்ட்ரிக் களமிறங்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் ஓர் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் பைக்

இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்து பைக்குகள் நிற்பதைப் போன்ற நிழற்படத்தையே அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படத்தின் வாயிலாகவே நிறுவனம் கூடிய விரைவில் எலெக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்ய இருக்கின்றது என்பது உறுதியாக தெரிய வந்து உள்ளது. ஒவ்வொன்றும் தனித்துவமான தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட இருப்பதையும் தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படம் உறுதி செய்து இருக்கின்றது.

நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பின்படி, அது இரு எலெக்ட்ரிக் பைக்குகளை மட்டுமே உருவாக்க இருப்பதாக கருதப்பட்டு வந்தது. ஆனால், புதிய தகவல்களோ நிறுவனத்திடம் ஐந்து புதிய எலெக்ட்ரிக் பைக்குகள் உருவாக்குவதற்கான திட்டம் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது. நிறுவனம் 'வாட் நெக்ஸ்ட்' (What Next) எனும் தலைப்பின்கீழ் ஓர் ஆன்லைன் நிகழ்ச்சி (Online Show)-யை நடத்தியது. தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே நிறுவனம் வெளியிட்டது.

ஓலா எலெக்ட்ரிக் பைக்

இதுதவிர, ஓலா எஸ்1 ஏர் மாடலை மூன்று விதமான தேர்வுகளில் புதிதாக அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இத்துடன், ஓலா எஸ்1-ஐ இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ஓலா வெளிப்படுத்தியது. இந்த தகவல்களைத் தொடர்ந்தே ஓலா எலெக்ட்ரிக் பைக்குகள் பற்றிய முதற்கட்ட விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், எலெக்ட்ரிக் பைக்குகள் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அதாவது, என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட பைக்குகளாக அவை வடிவமைக்கப்பட்டு வருகின்றன? முதல் பைக் எப்போது வெளியீடு செய்யப்படும்? என்பது போன்ற முக்கிய விபரங்களை ஓலா வெளியிடவில்லை. நிறுவனத்தின் இந்த செயல் ஓலா இருசக்கர வாகன பிரியர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருக்கின்றது. அதேவேளையில், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், டீசர் படத்தில் காட்சியளித்திருக்கும் மின்சார பைக்குகள், ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரும் என்பதை உறுதி செய்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் பைக்

இந்த தகவல் இந்தியர்களுக்கு, குறிப்பாக, மின் வாகன பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த டூ-வீலர் சந்தையையும் ஆளுகை செய்கின்ற வகையில் அனைத்து பிரிவுகளையும் குறி வைத்தே தனது மின்சார பைக்குகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தயார்படுத்தி வருகின்றது. அதாவது, தினசரி பயன்பாட்டு பைக், ஸ்போர்ட்ஸ் பைக், லாங் டிராவல் பைக் மற்றும் பிரீமியம் வசதிகள் நிறைந்த பைக்குகள் என அனைத்து பிரிவுகளையும் மையப்படுத்தி ஓலாவின் புதிய எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.

நிறுவனத்தின் பிளானில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கும் ஓர் இடம் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த தகவல்கள் சமீப காலமாகவே வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே சமீபத்தில் வெளியாகிய புதிய தகவல்கள், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் ஓலாவின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு தயாராகிவிடும் என தெரிவிக்கின்றன. இதுதவிர, சொந்தமாக லித்தியம் அயான் செல்கள் மற்றும் பேட்டரி பேக்குகளை தயாரிக்கும் முயற்சியிலும் ஓலா ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் பைக்

இதற்கான பிரத்யேக ஆலையும் இந்தியாவிலேயே அமைய இருக்கின்றது. நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலை இந்தியாவிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் இந்த மாதிரியான முயற்சிகளால், எதிர்காலத்தில் ஓலா மின்சார வாகனங்கள் தற்போது இருப்பதை விட பலமடங்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா நிறுவனம் 100 ஜிகாவாட் ஹவர் பேட்டரி செல்களை தயாரிக்கும் அளவிற்குக் கொள்ளளவு கொண்டதாக பேட்டரி ஆலையை அமைக்கத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 9, 2023, 20:10 [IST]
English summary
Ola electric bike plan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X