ஓலா செய்யப்போகும் தரமான சம்பவம்! இனி இந்தியா ஃபுல்லா இந்த பைக்குகளை பத்தி தான் பேச போறாங்க!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்குகளை மோட்டோ ஜிபி பாரத் போட்டியில் காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் டைமண்ட் ஹெட், அட்வென்சர், க்ரூஸர் மற்றும் ரோடுஸ்டார் ஆகிய நான்கு விதமான எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்துள்ளது. இந்த பைக்குகளை எல்லாம் காட்சிப்படுத்தப் போகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரித்து விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் டூவீலர்களில் ஓலா நிறுவனம் தான் பெரும்பான்மையான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. மற்ற நிறுவனங்கள் பக்கத்தில் கூட நெருங்க முடியாத வளர்ச்சியை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டும் விற்பனை செய்து வரும் நிலையில் எலெக்ட்ரிக் பைக்குகளையும் தயாரித்து வருகிறது. ஓலா நிறுவனம் நான்கு விதமான எலக்ட்ரினாக தயாரித்துள்ளது. அதன்படி டைமண்ட் ஹெட், அட்வென்சர், க்ரூஸர் மற்றும் ரோடுஸ்டார் ஆகிய நான்கு எலெக்ட்ரிக் பைக் தயாராகி உள்ளன.
இந்த பைக்கில் எல்லாம் வரும் 2024 ஆம் ஆண்டு புரொடக்ஷன் ஸ்பேக்காக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஓலா நிறுவனம் புதிதாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவிலேயே முதன்முறையாக மோட்டோ ஜிபி பாரத் என்ற மோட்டார் பைக் ரேஸ் போட்டி நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து நாளை துவங்குகிறது. இந்த போட்டியில் ஃபேன் சோன் என்ற பகுதி ஒன்று இருக்கிறது. அங்கு மோட்டார் பைக்குகல் எல்லாம் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் ஓலா நிறுவனமும் தனது மோட்டார் பைக்கை காட்சிப்படுத்தும் என அறிவித்துள்ளது. அதன்படி தன்னிடம் உள்ள நான்கு கான்செப்ட் பைக்குகளையும் நாளை காட்சிப்படுத்த உள்ளன. இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் தனது 150 ஸ்கூட்டர்களை டிராக்கில் உள்ள பணியாளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக பயன்படுத்த வழங்கி உள்ளது. ஓலா நிறுவனம் எந்த நிகழ்விற்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கும் வகையில் இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.
ஓலா நிறுவனம் ஏற்கனவே இதன் கான்செப்ட் பைக்குளை எல்லாம் காட்சிப்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் ரசிகர்கள் பார்வைக்காக மோட்டோ ஜிபி போட்டி நடக்கும் இடத்தில் இதை காட்சிப்படுத்துகிறது. இதனால் இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள் இந்த ஓலா எலெக்ட்ரிக் பைக்குகளை கண்டு ரசிக்க முடியும். அங்கு இந்த பைக் கொடுத்த சில முக்கியமான தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
ஓலா நிறுவனம் சமீபத்தில் தான் தனது மூவ் ஒஎஸ் 4 என்ற புதிய அப்டேட்டை பீட்டா வெர்ஷனாக தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது ஒவ்வொரு வாடிக்கையாளர்களாக இந்த அப்டேட்டை பெற்று வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ஸ்கூட்டரில் பல புதிய வசதிகளும் கிடைக்கிறது.
ஓலா நிறுவனம் இப்படியாக தனது எலெக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தனது எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரும்போது நல்ல ஹைப் ஏற்படும் என எதிர்பார்த்து இந்த திட்டத்தில் இறங்கி உள்ளது. மோட்டோ ஜிபி பைக் ரேஸை காண வருபவர்கள் பைக் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதால், தனது வாடிக்கையாளர்களை எளிதாக இதன் மூலம் சென்று சேர முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் எப்படி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். அதே போல ஓலா பைக்குகளும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் வகையில் ஓலா நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் தனது பைக்குகளை மார்க்கெட்டில் உள்ள மற்ற பைக்குகளை காட்டிலும் சற்று வித்தியாசமாக டிசைன் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








