வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஓலா! இந்த ஸ்கூட்டரோட விற்பனையை திடீர்ன்னு நிறுத்திட்டாங்க! காரணம் என்ன?
ஓலா நிறுவனம் தனது எஸ்1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை நிறுத்தியுள்ளது. சமீபத்தில் தான் எஸ்1 ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பர்ச்சேஸ் விண்டோவை ஓலா நிறுவனம் திறந்து உள்ள நிலையில் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை அதிரடியாக நிறுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒலா நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்நிறுவனம் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களை விட அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

ஓலா நிறுவனம் முதன்முதலாக எஸ்1 ப்ரோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்ததாக எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. ஓலா நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர்களும் சிறப்பாக தான் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் தான் ஓலா நிறுவனம் குறைந்த விலையில் ஏழை மக்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓலா எஸ்1 ஏர் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் குறித்த அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியை ஒட்டியே வெளியானது.

அதன் பின்பு அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில் இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கி தற்போது பர்ச்சேஸ் விண்டோவும் திறக்கப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்தவர்களுக்கு மட்டுமே தற்போது பர்ச்சேஸ் செய்யும் விண்டோ ஆப்ஷன் திறக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1.09 லட்சம் என்ற விலையிலும் வரும் 31ம் தேதி முதல் புக் செய்யாதவர்களுக்கு ரூபாய் 1.19 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்1 ப்ரோ, எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அதிரடி முடிவாக ஓலா நிறுவனம் தனது எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை அதிரடியாக நிறுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் ஆன்லைன் மூலமாக தான் பெரும்பான்மையான விற்பனையை செய்து வருகிறது. இந்நிலையில் இணையதளத்தில் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் ஆப்ஷனை ஓலா நிறுவனம் நீக்கிவிட்டது. இதனால் இனி யாரும் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியாது. இது ஓலா வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஓலா இணையதளத்தில் ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஓலா எஸ்1 ஏர் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மட்டும் தான் இருக்கிறது. இதற்கு காரணம் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஃபேம் மானியத்தை குறைத்ததன் விளைவாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிகரித்தது.
இதனால் ஓலா எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்களின் விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இதனால் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒலா நிறுவனம் நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டும் அந்நிறுவனம் விற்பனை செய்ய விரும்புகிறது.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை மூன்று கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 125 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற்ற 5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை 4.5 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹப் மோட்டாராக இருக்கிறது. இந்த மோட்டார் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 0- 40 கிலோமீட்டர் வேகத்திற்கு 3.3 நொடியில் பிக்கப் செய்து விடும் 60 கிலோ மீட்டர் வேகத்தை 5.7 நொடியில் எட்டிப்பிடித்து விடும் திறன் கொண்டது.
இந்த ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை சீறிப்பாயும். இந்த ஸ்கூட்டரில் மொத்தம் மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோடுகள் உள்ளன. இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் அவர்கள் பயன்படுத்தும் சாலைக்கு ஏற்ப வாகனத்தின் திறனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
அம்சங்களை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இதில் டச் ஸ்கிரீன் கிளஸ்டர் இருக்கிறது , அதில் ஏகப்பட்ட தகவல்களை ரைடர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஸ்கூட்டரில் பிராக்ஸிமிட்டி அன்லாக்,கால் அலார்ட்,பார்ட்டி மோடு, நேவிகேஷன், வெக்கேஷன் மோடு, டிஜிட்டல் கீ, டாக்குமெண்ட் ஸ்டோரேஜ், புரோஃபைல் மற்றும் மூடு ஆகிய ஆப்ஷன்கள் இருக்கிறது.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை இது எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட அதிக பிராக்டிகல் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதுபோக கிராப் ஹேண்டில் ஒரே மெட்டலால் செய்யப்பட்ட அம்சமாக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சீட்டுக்கு கீழே 34 லிட்டர் அளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது.
பிரேக்குகளை பொருத்தவரை இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஸ்டீல் வீல்கள் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை தற்போது ஏற்கனவே புக் செய்தவர்கள் மட்டுமே வாங்க முடியும். வரும் 31ஆம் தேதி முதல் அனைவருக்கும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் ஆப்ஷன் திறக்கப்படும்.
டிரைவிஸ்பார்க் கருத்து: ஓலா எஸ்1 ஏர் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையே பெரிய அளவில் விலை வித்தியாசம் இல்லாததால் இந்த எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒலா நிறுவனம் நீக்கி இருக்கலாம். ஆனால் இதற்கு பதிலாக புதிதாக ஏதாவது புதிய தயாரிப்பை ஒலா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








