ஸ்கூட்டர்களை நிறைய பேர் நம்பி வாங்குறாங்க, இருந்தாலும் ரூ.1,472 கோடி நஷ்டம்!! ஓலா எலக்ட்ரிக்கின் ரிப்போர்ட்
ஓலா எலக்ட்ரிக் மொபைலிட்டி (Ola Electric Mobility) நிறுவனம் கடந்த 2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.1,472 கோடி நஷ்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் சார்பில் இதுதொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ச்சிக் கண்டுவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக்கை சொல்லலாம். மற்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை போன்று, 2021ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் ஈடுப்பட ஆரம்பித்தது. ஆனால், கடந்த 2 வருடங்களில் ஓலா எலக்ட்ரிக் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் டாப்-10 2-வீலர்களுள் ஒன்றாக ஓலா விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணமாக, மக்கள் மத்தியில் ஓலா பிராண்டிற்கு இருக்கும் பரீட்சையத்தை சொல்லலாம்.
இருப்பினும், கடந்த 2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.1,472.08 கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவே, இதற்கு முந்தைய 2021-22 நிதியாண்டில் ரூ.784.15 கோடியை மட்டுமே நஷ்டமாக ஓலா எலக்ட்ரிக் சந்தித்து இருந்தது. மொத்தமாக கடந்த 2022- 23 நிதியாண்டில் ரூ.2,630.93 கோடியை வருவாயாக ஓலா எலக்ட்ரிக் பெற்றுள்ளது.

ஆனால், 2022ஆம் நிதியாண்டில் வெறும் ரூ.373.42 கோடியை மட்டுமே வருவாயாக இந்த இவி நிறுவனம் பெற்று இருந்தது. 2021- 22 நிதியாண்டில் ஓலா எலக்ட்ரிக்கின் வருவாய் இவ்வளவு குறைவாக இருப்பதற்கு காரணம், முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிகள் 2021 டிசம்பர் மாதத்தில் இருந்துதான் துவங்கின.
ஆதலால், 2022ஆம் நிதியாண்டில், வெறும் கடைசி 4 மாதங்களில் ஓலா எலக்ட்ரிக் ஈட்டிய வருவாய் தான் ரூ.373.42 கோடி ஆகும். மொத்தமாக 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாத வரையில் 1,56,251 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதில், 98,199 எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், 58,052 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன.

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "எங்களின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக தேவை மற்றும் அதிக விற்பனை எண்ணிக்கைகளை நாங்கள் அனுபவித்தோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ஃபேம் மானியத்தின் காரணமாக, எங்கள தயாரிப்புகளுக்கு உரிமையாளர் ஆகுவதற்கான செலவை குறைக்க முடிகிறது" என்றார்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 3 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைக்கு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 3இல் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா நிறுவனத்துடையது ஆகும். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஓலாவின் ஜிகா தொழிற்சாலையில் புதிய பேட்டரி உற்பத்தி பிரிவு வருகிற 2024 மார்ச் மாதத்திற்குள் செயல்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இறங்கி 2 வருடங்கள் ஆன போதிலும், இன்னமும் அதன் வணிகத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் பணியில்தான் ஈடுப்பட்டு வருகிறது. அதாவது, தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வது, டீலர்ஷிப் ஷோரூம்களை பல்வேறு பகுதிகளில் நிறுவுவது உள்ளிட்ட பணிகளில் ஓலா ஈடுப்பட்டு வருகிறது. ஆதலால், அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்பதால், ரூ.1,472 கோடி நஷ்டத்தை எல்லாம் ஓலா பெரியதாக எடுத்துக் கொள்ளாது.


Click it and Unblock the Notifications









