ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தரை மட்டத்துக்கு குறைய போகுது! ஏத்தர், சிம்பிள் எல்லாம் காலியாகபோகுது!
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பேட்டரி தயாரிப்பு ஆலைக்காக ரூபாய் 3200 கோடி முதலீடை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியாவில் அதிகமான எலVக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரும்பி வாங்குகின்றனர். பலர் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தில் இருக்கின்றனர். சாலையில் பலர் எங்கு பார்த்தாலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்களிடம் ஸ்கூட்டர் குறித்த அவர்களது சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.

ஓலா நிறுவனம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் ஆலையை அமைத்து ஸ்கூட்டர்களை தயார் செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உடன் சேர்ந்து லித்தியம் அயான் பேட்டரியை தயாரிக்கும் ஆலையையும் கிருஷ்ணகிரியிலேயே உருவாக்க முடிவு செய்திருந்தது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்நிறுவனம் இதற்காக ரூபாய் 3200 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் டெமாஷிக்லெட் முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா ஆகியவை மூலம் இந்த முதலீட்டை பெற்றுள்ளது. இந்த முதலீட்டை கொண்டு கிருஷ்ணகிரியில் அமைய உள்ள லித்தியம் அயான் பேட்டரி செல் தயாரிக்கும் ஆலையை கட்டமைக்க பயன்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேட்டரி ஆலையின் மூலம் ஓலா நிறுவனம் தனக்கு மட்டுமல்லாமல் பிற எலெக்ட்ரிக் வாகனதயாரிப்பு நிறுவனங்களுக்கும் பேட்டரிகளை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த ஆண்டு ஓலா நிறுவனத்தின் பேட்டரி ஆலை செயல்பாட்டிற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் கூறும்போது: " இந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்படும் போது கம்பஷன் இன்ஜின் வாகனங்களை முடிவுக்கு கட்டி எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் கொண்டு வருவது தான் நோக்கமாக இருந்தது.
எங்கள் அடுத்த ஜிகாஃபேக்டரின் மூலம் ஒலா நிறுவனம் சர்வதேச அளவிலான ஒரு எலெக்ட்ரிக் பிராண்ட் ஆக மாறப்போகிறது. தற்போது ஒலா நிறுவனம் இவிகள் மற்றும் பேட்டரிகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக வளர்ந்து வருகிறது. ஓலாவின் நோக்கத்திற்கு எங்கள் முதலீட்டாளர்கள் பெரும் உதவியாக இருக்கின்றனர். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவையும் புத்துணர்ச்சியையும் வழங்கி வருகின்றனர்." என கூறினார்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை கட்டமைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இதை மத்திய அரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் முதல் ஆலை இதுதான். இதில் அதிகபட்சமாக 20 ஜிகாவாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிஎல்ஐ ஸ்கீம் திட்டம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு மானியம் வழங்கும் திட்டமாகும். அரசின் இந்த நோக்கத்திற்கு இந்த ஆலைகள் உதவி செய்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்யும், என்ற வகையில் இந்த திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓலாவின் 2 வது ஆலையான பேட்டரி ஆலையில் முதல் கட்டமாக 5 ஜிகா வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரி தயாரிக்கும் ஆலையாக திறக்கப்பட்டு இது படிப்படியாக 100 ஜிகா வாட்ஸ் ஹவர் அளவிற்கு இதன் கொள்ளளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஓலா நிறுவனத்திடம் ஓலா எஸ்ஒன் எக்ஸ், எஸ் ஒன் ஏர் மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகி வருகின்றன. மேலும் ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் பைக்குகளையும் விரைவில் களமிறக்க தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த எலக்ட்ரிக் பைக் எல்லாம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் சொந்தமாக பேட்டரி ஆலையை துவங்கி விட்டால் அந்நிறுவனத்திற்கு தேவையான பேட்டரிகளை எல்லாம் சொந்த ஆலையிலேயே தயாராகும் இதனால் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்க ஆகும் செலவு வெகுவாக குறையும். இதன் எதிரொலியாக இந்தியாவில் ola எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது. எப்படியும் 2025 ஆம் ஆண்டிற்குள் இது சாத்தியமாகிவிடும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









