ஒரே ஃபங்க்ஷன்ல ஒட்டுமொத்த மார்கெட்டையும் வாயை பிளந்து பாக்க வச்சுட்டாங்க! வரிசையாக இத்தனை அப்டேட்டா?
ஒலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி தனது புதிய தயாரிப்புகளை வெளிிட்டு வருகிறது.அதன்படி இன்று தனது புதிய ஜென்2 தொழிற்நுட்பம் மற்றும் புதிய ஓலா எஸ்1 எக்ஸ் ஆகிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இது உள்ளிட்ட ஓலாவின்இந்த நிகழச்சி குறித்தவிபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா நிறுவனம் இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனமாக இந்நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ம் தேதி தான் தனது முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஓலா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் இன்று தனது 5 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பிளாட்ஃபார்மில் மாற்றங்களை செய்து 2ம் தலைமுறை பிளாட்ஃபார்மாக உருவாக்கியுள்ளது.
அதன்படி இந்நிறுவனம் தனது பேட்டரி, சேஸிஸ், எலெக்ட்ரிக்கல் காம்போனென்ட், மோட்டார் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களையும் மாற்றி அமைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் தனது தயாரிப்புகளின் திறனை மேம்படுத்தவுள்ளது. இந்த புதிய தலைமுறை பிளாட்ஃபார்ம் ஏற்கனவே அறிமுகமாகி தயாரிப்புகள் அதில் தயாராகிவருகிறது.

இந்த 2 தலைமுறை சிஸ்டம் பழைய தலைமுறையிலிருந்து 30 சதவீதம் அதிகமான ஃபெர்பாமென்ஸ், 25 சதவீதம் தெர்மல்ஃபெர்பாமென்ஸ், 25 உற்பத்தி செலவு குறைவு, 11 சதவீதம் குறைவான உதிரி பாகங்கள், 7 சதவீதம் குறைவாக பேட்டரி எனர்ஜி செலவு, 6 சதவீதம் குறைவான எடை ஆகியன சாத்தியமாகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
இந்த புதிய தலைமுறையில் தயாரிக்கப்பட்ட 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஓலா எஸ் 1 ப்ரோ, ஓலா எஸ்1 ஏர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே விற்பனையாகி வருகின்றன. இதில் புதியதலைமுறை ஸ்கூட்டரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இது போக ஓலா எஸ்1 எக்ஸ் மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி ஓலா எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 11 கி.வாட் மோட்டார் பொருத்தப்பட்டுளளது.இந்த ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.6 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதே நேரம் அதிகபட்சமாக 120 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் ரூ1,47,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதன் டெலிவரி செப்டம்பர் மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே புக்கிங் ஆகி வருவது ஜென் 2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது தான். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்துள்ளனர். தற்போது 5 விதமான கலர் ஆப்ஷன்களுடன் இந்த ஸ்கூட்டர் புக்கிங் செய்யப்படுகிறது. இதன் டெலிவரி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓலா எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 2 விதமான பேட்டரி வேரியன்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இரண்டிற்கும் பேட்டரி வேரியன்ட் மட்டுமே மாறுபடுகிறது. ஒன்று 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. இது ரூ89,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது இதை இந்த வாரம் புக் செய்தால் ரூ79,999 என்ற விலையில் கிடைக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது,
3 கிலோ வாட் ஹவர் பேட்டரியை பொருத்தவரை ரூ99,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பைக்கை வரும் 21ம் தேதிக்கு முன்பு புக்கிங் செய்தால் ரூ89,999 என்ற விலையில் வாங்க முடியும் என தெரிவித்தள்ளது. அடுத்ததாக எஸ் 1 எக்ஸ் பிளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுக்கும் எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் மட்டுமே கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.

எஸ் 1எக்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ1,09,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இதை வரும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் புக்கிங் செய்தால் ரூ99,999 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். எஸ்1 எக்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி செப்டம்பர் மாத இறுதியிலும், எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி டிசம்பர் மாதமும் துவங்கும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.
எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் மற்றும் பின்பக்கம் ட்வின் கேஸ் சார்ஜ்டு அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் முன்பக்கமும் பின்பக்கமும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஸ்டீல் வில் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்தவரை காம்பி பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்தாக ஒலா நிறுவம் தனது ஓஎஸ்-ஐ அப்டேட் செய்து மூவ் ஓஎஸ் 4 என்ற பெயரில் டீஸ் செய்துள்ளது. இதன் பீட்டா வெர்ஷன் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிமுதல் செயல்பாடடிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாக ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்கின் புரோட்டா டைப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி க்ரூஸர், அட்வெஞ்சர், ரோடுஸ்டர் மற்றும் டைமண்ட் ஹேட் ஆகிய 4 எலெக்ட்ரிக் பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தன்து தயாரிப்புகளை விரிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள தயாரிப்புகளையும் அப்டேட் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









