அஜித்தை வச்சு கிரியேட் செய்திருக்கும் மீம் வேற லெவல்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இவருக்கு பரிசா கிடைக்கலாம்!
மிக சிறந்த மீம் (Meme) கிரியேட் செய்யும் மீம் கிரியேட்டருக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) பரிசளிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ (CEO) பவிஷ் அகர்வால் உறுதி அளித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவெடுத்திருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது ஓர் கான்டெஸ்டை அறிவித்து இருக்கின்றது. அதாவது, மிக சிறந்த மீமை உருவாக்கும் மீம் கிரியேட்டருக்கு ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

பலமடங்கு உயர்ந்து காணப்படும் எரிபொருள் விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில் அந்த மீம் இருத்தல் வேண்டும் என்பது முக்கிய விதியாகும். கடந்த சில மாதங்களாக பெட்ரோலின் விலை உயரவில்லை என்றாலும் அதன் விலை ஏறியது ஏறியதாகவே இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இந்த விலையிலேயே பல மாதங்களாக பெட்ரோல் தொடர்ச்சியாக சென்னையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், மிகவும் காஸ்ட்லியானதாக அது காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே பெட்ரோலையும், பெட்ரோலில் இயங்கும் வாகனங்களையும் கிண்டலடித்து மீமை கிரியேட் செய்ய மீம் கிரியேட்டர்களுக்கு ஓலா நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

இதில் மிக சிறந்த மீம் கிரியேட் செய்யும் போட்டியாளருக்கு ஓலா எஸ்1 ப்ரோவின் சிறப்பு எடிசன் பரிசாக வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், ஏற்கனவே பலர் தங்களின் மீமை கிரியேட் செய்து ஓலாவிற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஷேர் செய்ய தொடங்கிவிட்டனர்.
பல பேர் பல விதமாக மீமை கிரியேட் செய்து தங்களின் தனித் திறமையை காட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், பிரபல நடிகர் அஜித்தின் ஃபேமஸ் முக பாவனையை முன் வைத்து கிரியேட் செய்யப்பட்டிருக்கும் மீம் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து உள்ளது.

அஜித் வேதாளம் திரைப்படத்தில் மிக சோகமான முகத்தில் இருந்து மாஸான நக்கல் சிரிப்பிற்கு மாறுவார். இந்த சீனையே பெட்ரோல் வாகன பயன்பாட்டாளர்களின் மன நிலையுடன் ஒப்பிட்டு மீம் கிரியேட் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வேற லெவலில் இருக்கின்றது. டீசல் கார் ஓனர்கள் மிகுந்த வேதனையில் இருப்பதை முதல் படம் காட்டுகின்றது.
இதைத்தொடர்ந்து, பெட்ரோல் கார் உரிமையாளர்கள் கணிசமான அளவில் மன அழுத்தத்தில் இருப்பதையும், பிளாட்டினா உரிமையாளர்கள் கஷ்டத்தில் இருந்தும் இல்லாததைப் போல் இருப்பதையும், சிஎன்ஜி வாகன உரிமையாளர்கள் ஓரளவு குஷியில் இருப்பதைப் போலவும், மின்சார வாகன உரிமையாளர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதைப் போலவும் அந்த மீம் அமைந்துள்ளது.

இதேபோல் மற்றுமொரு மீமும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பிரபல சூப்பர் ஹீரோவான பேட்மேன் பெட்ரோல் விலைவாசி உயர்வின் காரணமாக அவருடைய பேட்-மேன் பைக்கை கை விட்டுவிட்டு சூப்பர் மேன் மீது லிஃப்ட் கேட்டு பயணிப்பதைப் போன்று அந்த மீம் அமைந்துள்ளது. இதுவும் வேற லெவல் மீமாக பார்க்கப்படுகின்றது.

இதேபோல், ஓர் நபர் தன்னுடைய அனைத்து உடைமைகளையும் விற்று விட்டு பெட்ரோல் போட்டுவிட்டதாகவும், இதனாலேயே இருசக்கர வாகனத்தில் வெறும் உள்ளாடையுடன் பயணிப்பதாகவும் ஓர் மீம் கிரியேட் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அனைத்து மீம்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த போட்டியில் வெற்ற பெற இருக்கும் நபருக்கு ஓலா எஸ் 1 ப்ரோவின் சிறப்பு பதிப்பு பரிசாக வழங்கப்பட இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு உருவத்தில் மட்டுமே வித்தியாசம் கொண்டதாக இருக்கும். ரேஞ்ஜ் தருவதில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓர் முழு சார்ஜில் ஓலா எஸ்1 ப்ரோ 180 கிமீ தூரம் வரை பயணிக்கும்.


Click it and Unblock the Notifications









