இவ்ளோ சீக்கிரமே ஓலா எலெக்ட்ரிக் பைக் அறிமுகமாக போகுதா! இப்பவே வரிசையில நின்ற வேண்டியதுதான்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதோடு தன்னுடைய வர்த்தகத்தை முடித்துக் கொள்ளும் மன நிலையில் அந்த நிறுவனம் இல்லை.

அது மின்சார கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஆனால், அது எப்போது என்கிற தகவல்தான் உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எப்போது இ-பைக்கை வெளியீடு செய்யும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Ola electric bikes range

இந்தியாவில் சில புதுமுக தயாரிப்புகளை வரும் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்ய ஓலா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்டு 15 அன்றே புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அன்றைய தினத்திலேயே எலெக்ட்ரிக் பைக்கும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலால் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆகஸ்டு மாதத்திற்காக பெருத்த ஏக்கத்துடன் காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். கடந்த பிப்பரவரி மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 5 புதிய மோட்டார்சைக்கிள்களின் டீசரை வெளியிட்டு இருந்தது. நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த மின்சார இருசக்கர வாகன பிரியர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.

இவர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டு டுவிட்டர் வாயிலாக அவ்வப்போது இ-பைக் பற்றிய சில தகவல்களை நிறுவனத்தின் சிஇஓ பகிர்ந்த வண்ணம் இருக்கின்றார். தங்களின் நிறுவனம் மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதை சமீபத்தில் டுவிட்டர் பதிவின் வாயிலாக அவர் உறுதிப்படுத்தினார்.

இதுதவிர ஓலா-வின் புதிய இ-மோட்டார்சைக்கிளை டெஸ்ட் டிராக்கில் வைத்து சோதனை செய்து அதுகுறித்த தகவலையும் அவர் பகிர்ந்தார். இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கிரங்கடிக்கச் செய்யும் வகையில் அமைந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே ஆகஸ்டு மாதத்தில் நிறுவனம் திட்டமிட்டிருக்கும் புதுமுக வாகன அறிமுக நிகழ்ச்சியில் இ-பைக்கை உலக அளவில் வெளியீடு செய்ய ஓலா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நாளில் மின்சார பைக் மட்டுமல்ல புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த பணியில் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஆகஸ்டு மாதத்தில் இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் மாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஓர் முழு சார்ஜில் 300 கிமீ முதல் 350 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே இதன் வருகை இந்திய எலெக்ட்ரிக் டூ-வீலர் சந்தையை இப்போதே அலற செய்யும் வகையில் அமைந்து இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் இ-பைக் பிரிவில் ரிவோல்ட், ஜாய் இ-பைக், ஒடைசி மற்றும் கபிரா உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கே போட்டி அளிக்கும் வகையில் ஒலா எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் தனது இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பலமடங்கு குறைவானச விலையிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 2 லட்சம் அல்லது ரூ. 2.50 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே ஓலா இ-பைக் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், செயல் திறன் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகிய விஷயங்களிலும் இந்த பைக் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 11, 2023, 21:40 [IST]
English summary
Ola electric motorcycles launch expected 2023 independence day
மேலும்... #ஓலா #ola #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+