இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! ஓலா வண்டி இல்லாத வீடே இல்லங்கற நிலைமை வரப்போகுது பாருங்க!

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மிக குறுகிய காலத்தில், மிக பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இந்த சூழலில் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 19 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 400 சதவீதம் அதிகம் ஆகும். இது மிக பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Ola S1 Air

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மொத்தம் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அவை எஸ்1 ப்ரோ (S1 Pro), எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1எக்ஸ்+ (S1X+) ஆகியவை ஆகும். இவை தவிர எஸ்1எக்ஸ் (S1X) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அவை 3 kWh மற்றும் 2 kWh ஆகியவை ஆகும். ஆக மொத்தத்தில் இந்திய சந்தையில் மொத்தம் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது விற்பனை செய்து கொண்டுள்ளது.

Ola S1 Air Rear

இதில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் மிகவும் விலை (Price) உயர்ந்த மாடல் ஆகும். தற்போதைய நிலையில் அதன் விலை 1,47,499 ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உள்ள ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1,19,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஓலா எஸ்1எக்ஸ்+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் இதற்கு அடுத்த மாடல் ஆகும். இதன் விலை 1,09,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓலா எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3 kWh பேட்டரி ஆப்ஷன் மாடலின் விலை 99,999 ரூபாயாக இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3 kWh பேட்டரி ஆப்ஷன் மாடலின் விலை 89,999 ரூபாயாக உள்ளது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். கிட்டத்தட்ட அனைத்து வகையான விலைகளிலும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் அந்த நிறுவனத்தால் கவர முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 புதிய எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

இவை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். எலெக்ட்ரிக் பைக்குகள் மட்டுமல்லாது, இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 23:57 [IST]
English summary
Ola electric scooter sales crosses 19000 units in august 2023 full details
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+