Ola Electric Scooter-இல் ஒரே நேரத்தில் பயணித்த 6 பேர்.. ஆறாவது நபர் எங்கேனு தெரியுறாரா? வைரல் வீடியோ!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக 'ஓலா எலெக்ட்ரிக்' (Ola Electric) உருவெடுத்து இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே தற்போது நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி என பன்முக நிறுவனங்கள் பலதரப்பட்ட தேர்வுகளுடன் களத்தில் இருக்கின்ற போதிலும், மின்சார இருசக்கர வாகன விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக்கே வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், இந்த நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை குறை சொல்பவர்களும் அதிகளவில் காணப்படுகின்றனர். குறிப்பாக, தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வரும் பலரும் அதன் தரம் மிகவும் குறைவாக இருப்பதாக பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தாமாக முன் வந்து வாடிக்கையாளர்களின் சில பிரச்னைகளை தீர்த்து வைத்து தொடங்கியிருக்கின்றது.

Ola electric scooter stunt with 6 people on board

அந்தவகையில், கடந்த சில காலமாக அதிகளவு சர்ச்சையை கிளப்பி வரும் முன் பக்க சஸ்பென்ஷன் பிரச்னைக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தீர்வு காண தொடங்கி உள்ளது. கடந்த காலங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிலவற்றின் முன் பக்க ஃபோர்க் திடீரென உடைந்து விபத்தைச் சந்தித்தன.

எங்கோ ஒரு பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த சம்பவம் சமீப சில நாட்களாக தொடர் கதையாக மாறும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற தொடங்கியிருக்கின்றது. இதுதவிர, தொழில்நுட்ப கோளாறு பிரச்னைகளையும் ஓலா எலெக்ட்ரிக் சந்திக்கத் தொடங்கியது. இந்த நிலையிலேயே தாமாக முன் வந்து சிக்கல் இருப்பதாக கண்டறியப்படும் அனைத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் முன் பக்க சஸ்பென்ஷனை இலவசமாக மாற்றிக் கொடுப்பதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்தது.

இதற்கான அழைப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு அது விடுத்து வருகின்றது. இந்த நிலையிலேயே ஓர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆறு பேர் வரை பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. ஒருத்தர் போகும்போதே சஸ்பென்ஷன் உடைந்த சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இது எப்படி சாத்தியம் ஆகும் என்கிற கேள்வியையே இந்த வீடியோ நம் அனைவரின் மனத்திலும் எழுப்பி இருக்கின்றது.

வீடியோவில் காட்சியளிக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் புதிய சஸ்பெஷன் செட்-அப்பைக் கொண்டது என கூறப்படுகின்றது. இது சூப்பர் ஸ்ட்ராங் மற்றும் பாதுகாப்பு திறன் கொண்டது என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது. இதை சோதித்து பார்க்கும் வகையிலேயே யுட்யூபர்கள் இத்தகைய செயலை செய்து பார்த்திருக்கின்றனர்.

இந்த வீடியோவையே தற்போது ஓலா எலெக்ட்ரிக் பகிர்ந்திருக்கின்றது (பகிர மட்டுமே செய்திருக்கின்றது). முன் பக்க ஃபோர்க்கின் உறுதித் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு பேரை வாகனத்தின்மீது ஏற்றி யுட்யூபர்கள் ரைடு செய்திருக்கின்றனர். தரமான சாலைக்கு பதிலாக ஒழுங்கற்ற (கரடு-முரடான) பாதையில் வைத்தே இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக இனி வரும் காலங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. குறிப்பாக, முன் பக்க சஸ்பென்ஷன் உடையும் என்கிற பிரச்னை வரவே வராது என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சோதனையானது பொது வெளியில் மேற்கொள்ளப்படவில்லை என யுட்யூபர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சோதனையின்போது எலெக்ட்ரிக் வாகனத்தின்மீது அமர்ந்திருந்த அனைவரும் தலைக் கவசத்தை அணிந்திருந்தனர். ஆகையால், பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படியே அவர்கள் இந்த சோதனையை செய்திருக்கின்றனர். ஸ்கூட்டரை ஓட்டியபடி ஒருவரும், அவருக்கு பின்னால் அமர்ந்தபடி ஒருவரும், இவரின் இரு தொடைகளிலும் அமர்ந்தபடி இருவரும், இவர்களுக்கு நடுவில் ஐந்தாவதாக ஒருவர் நின்றபடியும் இருந்தனர்.

ஆறாவது நபர் ஸ்கூட்டரின் ஃப்ளூர்-ஃபோர்டில் அமர்ந்திருந்தார். இவ்வாறே ஆறு பேர் ஏறி அந்த வாகனத்தின் உறுதித் தன்மையை வெளிக்காட்டி இருக்கின்றனர். குறைந்தபட்சம் ஒவ்வொரு நபரும் 45 முதல் 55 கிலோ வரையில் எடைக் கொண்டவர்களாக இருப்பர். இவ்வளவு அதிக எடையை தாங்கியிருந்தபோதிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறிதும் இன்னல்கள் இன்றி சிறப்பாக செயல்படுவதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வீடியோவை பார்க்கையில் மற்றவர்களை போல் எங்களுக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது புதிய நம்பிக்கை பிறந்திருக்கின்றது. இந்த நம்பிக்கையை அப்படியே அந்நிறுவனம் காப்பாற்றும் எனில் அடுத்து வரும் காலங்களிலும் இந்த நிறுவனமே இந்தியர்களின் பிரியமான மின்சார வாகன உற்பத்தியாளராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 20, 2023, 12:12 [IST]
English summary
Ola electric scooter stunt with 6 people on board
மேலும்... #ஓலா #ola #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+