செப் 15ம் தேதி வரப்போகுது புதிய அப்டேட்! ஓலா செய்யப்போகும் தரமான சம்பவம்!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய அப்டேட்டாக மூவ் ஓஎஸ் 4 அப்டேட்டை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரும் செப்டம்பர் மாதம் முதல் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கின்றன? புதிய விஷயங்கள் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன என விரிவாக கவனமாக வாருங்கள்.
ஓலா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தான் தனது முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. அதன்படி செண்டிமெண்டாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 தேதி தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமான ஒன்று தான் மூவ் ஓஎஸ் 4 அப்டேட்.

தற்போது ஓலா எலக்ட்ரிக் வாகனங்களின் சாப்ட்வேர் முவ் என்ற தளத்தில் தான் இயங்கி வருகிறது. தற்போது 3 என்ற ஒஎஸ்-ஐ தான் ஓலா பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓஎஸ் போர் அப்டேட் நேற்று ஓலா நிறுவனம் தனது புதிய அப்டேட்டாக அறிமுகப்படுத்தியது.
வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த அப்டேட் பீட்டா வெர்ஷனாக படிப்படியாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. விரைவில் இது முழு அப்டேட் ஆக அடுத்து சில மாதங்களில் மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு அப்டேட்டில் அதில் ஆப்ஷன்கள் உள்ளது.

இந்த மூவ் ஓஎஸ் 4-ல் பல்வேறு முக்கியமான அப்டேட்களை ஓலா நிறுவனம் கொண்டுள்ளது. அதன் முதல் முக்கிய அப்டேட்டாக ஓலா நிறுவனம் தனக்கென பிரத்தியேகமாக மேப் ஒன்றை உருவாக்கியுள்ளது. தற்போது வரை கூகுள் மேப்பையே நிறுவனம் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஓலா மேப் என்ற புதிய தயாரிப்பை நிறுவனம் இந்த ஓஎஸ் 4 உடன் அறிமுகப்படுத்துகிறது.
இது பார்ப்பதற்கு கூகுள் மேப் போலவும் எளிதாக பயன்படுத்தும் படியும் அதே நேரம் அதிக தகவல்களை கொண்டதாகவும் இருக்கிறது. அடுத்ததாக ஜியோ பென்சிங் என்ற ஆப்ஷனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனம் பயணித்தால் அதன் உரிமையாளருக்கு நோட்டிபிகேஷன் சென்றுவிடும்.

அதிலேயே அடுத்த அப்டேட்டாக எந்தெந்த நாளுக்கு எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்ற ஆப்ஷனையும் டைமிங் பென்சில் என்ற பெயரில் ஊழல் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஓலா ஆப்-ல் குறிப்பிட்ட ஓலா ஸ்கூட்டர் குறித்த பல முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பேட்டரியின் அளவு எவ்வளவு தூரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்து வந்த பாதைகள் சராசரி வேகம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்கள் எல்லாம் முதலிடம் பெறுகிறது.
மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கான்செட் மோட் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது பார்ட்டி மோடு என்றால் ஒரு ஸ்கூட்டரில் மட்டுமே விளக்குகள் மாறி மாறி எரியும் ஆனால் கான்செர்ட் மோடில் நாலைந்து ஸ்கூட்டர்கள் ஒரே இடத்தில் இருந்தால் அத்தனை ஸ்கூட்டர்களும் ஒரே இடத்தில் ஒரே விதமான பாடலுக்கு ஏற்றவாறு லைட்டுகளை மாற்றி மாற்றி எரிய வைக்கும்.
மேலும் இந்த அப்டேட்டில் மேம்படுத்தப்பட்ட சார்ஜிங் நேர கணிப்பு, மேம்படுத்தப்பட்ட ரீஜன், ஹில் ஹோல்டு, புதிய டிசெண்ட் ஹோல்டு, பயோமெட்ரிக் அன்லாக், ஆப்பு பட்ஜெட்டுகள், அதிகரிக்கப்பட்ட ரேஞ்ச், எக்கோ மோட், பர்சனல் லைஸ்டு பிராக்ஸிமிட்டி, ஆட்டோ ஆப் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இதுபோக இந்த அப்டேட்டில் புதிய ட்ரிப் மீட்டர்கள், ஹெட் போன் மியூசிக் கண்ட்ரோல், ஆப்புகளிலேயே பயன்படுத்தக்கூடிய வெக்கேஷன் மோடு, கால் செட்டிங், ஹில் ஹோல்டு செட்டிங், ரீசன்ட் செட்டிங், ஆகியன இருக்கிறது.இதுபோக முன்பை விட கூடுதலாக காண்டாக்ட் சிங் மற்றும் பேரிங் வேகமாக நடக்கிறது. மேலும் நமக்கு பிரியமானவர்களிடமிருந்து ஃபோன் வந்தால் அதை தனித்துவமாக எடுத்துக்காட்டும் பிரத்தியேக ஆப்ஷனும் இருக்கிறது. செல்போன் ஆப்-பில் தற்போது டார்க் மோடும் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கிய அப்டேட் ஆக இந்த வாகனத்தை யாராவது திருட முயன்றால் உடனடியாக வாகனத்தில் இருந்தும் செல்போன் ஆப்பிள் இருந்தும் திருட்டு முயற்சி கொடுத்த அலாரம் ஒலிக்கிறது. இவ்வளவு முக்கிய அப்டேட்டுகளை கொண்டு இந்த ஓலா ஓ எஸ் 4 வரும் செப்டம்பர் 15 முதல் பீட்டா வெர்ஷனாக செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தனது ஓஎஸ் -ஐ அப்டேட் செய்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த அப்டேட் வாடிக்கையார்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் எனவ எதிர்பார்க்கலாம். இந்த அப்டேட்டிற்காக மக்கள் காத்திருக்கின்றனர். செப் 15 முதல் படிப்படியாக இது அறிமுகப்படுத்தப்படும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









