மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரியை தொடங்கியது ஓலா.. ரோடுல ஆடு-மாடுகளை இது அதிகமா மேயபோகுது!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) மாடல் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி சில தினங்களே ஆகின்றன.
இதனை ஐசிஇ வாகனங்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக ஓலா எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, பெட்ரோலில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களான ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டி அளிக்க வேண்டும் என்பதற்காகவே ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் இ-ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதன் அடிப்படையில் சமீபத்தில் ஓர் தரமான சம்பவத்தையும் அது செய்தது. அதாவது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை மிகப் பெரிய அளவில் குறைத்தது. 20 ஆயிரம் ரூபாய் வரையில் அதன் விலையில் குறைப்பைச் செய்தது, ஓலா. இந்த நடவடிக்கையால், முன்னதாக ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்டதாக காணப்பட்ட ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ்-இன் விலை தற்போது ரூ. 89,999 ஆக குறைந்திருக்கின்றது.
இதனால் பட்ஜெட் விலையில் இருசக்கர வாகனத்தை வாங்க நினைப்பவர்களையும் புதிய எஸ்1 எக்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கவர தொடங்கி இருக்கின்றது. மேலும், இது ஓர் குறைந்த கால சலுகை விலை ஆகும். ஜனவரியில் இருந்து இதன் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தன்னுடைய ஜென் 2 வகை பிளாட்பாரத்தில் வைத்தே தயாரிக்கின்றது. ஆகையால், சிறந்த செயல்திறன், அதிக தொழில்நுட்ப வசதி மற்றும் நல்ல ரேஞ்ஜ் திறனை வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 பிளஸ் எக்ஸ் காட்சியளிக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பேக்கை ஓலா எலெக்ட்ரிக் பயன்படுத்தி இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். மேலும், 6 kW திறன் கொண்ட மின்சார மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது.
ஓலா எலெக்ட்ரிக், நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில சிறப்பு சலுகைகளையும் தற்போது அறிவித்து இருக்கின்றது. இதனையும், 'டிசம்பர் டூ ரிமெம்பர்' (December to Remember) திட்டத்தின் வாயிலாகவே அது அறிமுகம் செய்திருக்கின்றது. கம்யூனிட்டி மெம்பர்களுக்கு சிறப்பு சலுகைகளை ஓலா அறிவித்து இருக்கின்றது.
இவர்கள் கூடுதல் வாரண்டி திட்டத்தினை 50 சதவீதம் சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், நண்பர்களுக்கு பரிந்துரை செய்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்க இருப்பதாகவும் ஓலா அறிவித்து இருக்கின்றது. இதேபோல் ரெஃபரிக்கு 3,000 வரை சலுகை வழங்கப்ப இருப்பதாகவும் ஓலா தெரிவித்து இருக்கின்றது.
இந்த சலுகை ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஏர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஓலா எஸ்1 போர்ஃபோலியோவின்கீழ், எஸ்1 ப்ரோ (2ஆம் தலைமுறை) S1 Pro (2nd Generation) விலை ரூ. 1,47,499, எஸ்1 ஏர் (S1 Air) விலை ரூ. 1,19,999 மற்றும் எஸ்1 எக்ஸ் (S1X) ஆகிய தேர்வுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இதில், எஸ்1 எக்ஸ்-ஐ முன்று விதமான தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும். எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+), எஸ்1 எக்ஸ் (S1 X 3kWh) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X 2kWh) ஆகியவையே அவை ஆகும். இதில், எஸ்1 எக்ஸ் 3kWh மற்றும் எஸ்1 எக்ஸ் 2kWh ஆகியவற்றின் விற்பனை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்1 எக்ஸ் 3kWh மற்றும் எஸ்1 எக்ஸ் 2kWh ஆகிய இரண்டிற்கும் இப்போதே ரிசர்வேசன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவையும் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே நாட்டில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








