மலிவு விலை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படத்தை வெளியிட்ட ஓலா சிஇஓ.. ஆஹா உற்பத்தியை தொடங்கிட்டாங்களா!!

ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பவிஷ் அகர்வால் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்த படத்தை வெளியிட்டதன் வாயிலாக அவர் இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்களுக்கு என்ன சொல்ல வந்திருக்கின்றார் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஓலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எஸ்1 எக்ஸ் (S1 X) மாடல் இருக்கின்றது. இதுவே, நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஆகையால், இருப்பதிலேயே ஓலாவின் மிக மிக விலை குறைவான ஸ்கூட்டர் என்ற புகழ் அதற்கு உண்டு.

Ola first s1x electric scooter

இதன் புகைப்படத்தையே தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் வெளியிட்டு இருக்கின்றார். இதன் வாயிலாக நிறுவனம் எஸ்1 எக்ஸ் மாடலின் உற்பத்தியை தொடங்கிவிட்டது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், வெகு விரைவில் அதன் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இதனை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலேயே பவிஷ் அகர்வால் புதிய அதன் படத்தை வெளியிட்டு இருக்கின்றார். சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஏத்தர் எனெர்ஜி அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஏத்தர் 450எஸ் மாடலின் உற்பத்தியை தொடங்கியது.

Ola s1x

இதன் உற்பத்தி பணிகள் தொடங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அதன் ஃபேக்டரி உற்பத்தி செய்யப்பட்டு டெலிவரிக்காக வெளியேற்றம் செய்ய தயார் நிலையில் இருந்த 450எஸ் யூனிட்டுகளின் படத்தை அந்நிறுவனம் வெளியிட்டது. இதைப் போலவே தற்போது ஓலா நிறுவனம் அதன் உற்பத்தி செய்யப்பட்ட முதல் யூனிட்டின் படத்தை வெளியிட்டு இருக்கின்றது.

இதுவே முதல் 450எஸ் யூனிட் என்பதையும் பவிஷ் அகர்வால் அவரின் எக்ஸ் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். அறிமுகமாக எஸ்1 எக்ஸ் மாடலுக்கு ரூ. 79,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த விலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அது விற்பனைக்கு வழங்கப்பட்டது. அறிமுக சலுகை விலையே அது ஆகும்.

தற்போது எஸ்1 எக்ஸ் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 89,999 ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ஆப்ஷன்களில் ஓலா எஸ்1 எக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ்1 எக்ஸ் (2kWh), எஸ்1 எக்ஸ் (3kWh) மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் (3kWh) ஆகியவையே அவை ஆகும்.

இதில் உயர்நிலை தேர்வாக எஸ்1 எக்ஸ் பிளஸ் மாடல் இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், ஆரம்ப நிலை வேரியண்டான 2kWh பேட்டரி பேக் கொண்ட எஸ்1 எக்ஸ் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

ரேஞ்ஜ் திறனில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் இந்த தேர்வுகளில் ஒரே மாதிரியான மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், எஸ்1 எக்ஸ் பிளஸ் மாடலில் 5 அங்குல திரையும், சாவியே இல்லாமல் அன்லாக் செய்யும் வசதியும் மற்றும் ஸ்மார்ட் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கும்.

ஆனால், மலிவு விலை தேர்வான எஸ்1 எக்ஸ் 2 kWh மற்றும் எஸ்1 எக்ஸ் 3 kWh தேர்வகளில் 3.5 அங்குல திரையும், வழக்கமான சாவி சிஸ்டமும் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலான நவீன கால அம்சங்களை இதில் வழங்கப்படவில்லை. மலிவு விலையில் விற்பனைக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சில அம்சங்களை ஓலா எலெக்ட்ரிக் இதில் தவிர்த்து இருக்கின்றது.

இத்தகைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் உற்பத்தியையே தற்போது ஓலா நாட்டில் தொடங்கி இருக்கின்றது. இதற்கு ஏற்கனவே இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், விரைவில் இதுவும் விற்பனையில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை எதிர்காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்களை ஆளுகை செய்யும் என்பது தெளிவாக தெரிகின்றது. இதை நோக்கியே தன்னுடைய பயணத்தை ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. இதன் மிக முக்கியமான நோக்கமே பெட்ரோல் வாகனங்களை ஒழிப்பதாகும். இதற்காகவே மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அது விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 22:41 [IST]
English summary
Ola electric starts production of s1x electric scooter ceo bhavish aggarwal shares pictures
மேலும்... #ஓலா #ola #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+