இத்தன இ-பைக்குகளுக்கு ஓலா பதிவு செஞ்சிருக்கா! ஸ்பிளெண்டர், ஆக்டிவா ரெண்டும் காணாமல் போவது கன்ஃபார்ம்!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஐசிஇ வாகனங்களே இல்லாத இந்தியாவையும், இந்த உலகத்தையும் உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே எஸ்1 (S1), எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில், லேட்டஸ்ட் வருகையாக எஸ்1எக்ஸ் இருக்கின்றது. இதன் அறிமுக விலை ரூ. 80 ஆயிரம் மட்டுமே ஆகும். இந்த அளவு மலிவு விலையை அதற்கு ஓலா நிர்ணயிக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கின்றது. பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்பதே அதுவாகும்.

Ola electric trademarks 6 e-bikes

இதன் அடிப்படையிலேயே முழு வீச்சில் இயங்கத் தொடங்கி இருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். ஏற்கனவே மலிவு விலையில் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கத் தொடங்கிவிட்ட நிலையில் இப்போது எலெக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணிகளில் ஓலா எலெக்ட்ரிக் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பலதரப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு டிரேட்மார்க் பதிவை செய்திருப்பது குறித்த தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் டிரேட்மார்க் பதிவைச் செய்திருக்கின்றது.

Ola m1 adventure trademark

ஓலா நிறுவனம் அதன் எஸ்1 சீரிஸில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதைப் போல எம்0 (M0) மற்றும் எம்1 (M1) ஆகிய சீரிஸ்களில் அதன் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக எம்0 மற்றும் எம்1 ஆகிய சீரிஸ்களுக்கு தற்போது டிரேட்மார்க் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

எம்0 சீரிஸில் டைமண்ட் ஹில் எனும் ஒற்றை மாடலுக்கும், எம்1 சீரிஸின் கீழ் எம்1 க்ரூஸர், எம்1 அட்வென்சர், எம்1 சைபர் ரேசர், எம்1 ரோட்ஸ்டர் மற்றும் எம்1 டைமண்ட் ஹெட் ஆகிய ஐந்து மாடல்களுக்கும் ஓலா டிரேட்மார்க் பதிவை செய்திருக்கின்றது.

Ola m0 diamond hill trademark

இந்த மோட்டார்சைக்கிள்கள் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அவை வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சமீபத்தில் ஓலா நிறுவனம் எஸ்1 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக நிகழ்வின்போது நான்கு மின்சார மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் காட்சிப்படுத்தியது.

க்ரூஸர் (Cruiser), அட்வென்சர் (Adventure), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் டைமண்ட் ஹெட் (Diamond Head) ஆகிய 4 எலெக்ட்ரிக் பைக் மாடல்களையே நிறுவனம் வெளியீடு செய்தது. இந்த சம்பவமானது ஆகஸ்டு 15 ஆம் அன்றே அரங்கேறியது. ஆனால், டிரேட்மார்க் பதிவானது கடந்த ஜூலை மாதம் 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

Ola m1 cruiser trademark

இதற்கு பின்னரே அந்நிறுவனம் நான்கு இ-பைக் மாடல்களை மட்டும் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஆகையால், சமீபத்தில் இந்தியாவில் பொது பார்வைக்குக் கொண்டு வரப்பட்ட க்ரூஸர், அட்வென்சர், ரோட்ஸ்டர் மற்றும் டைமண்ட் ஹெட் ஆகிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களே முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இவை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பதை ஓலா எலெக்ட்ரிக் இப்போது வரை உறுதி செய்யவில்லை. சமீபத்தில் காட்சிப்படுத்தியபோது கூட அவை கான்செப்ட் மாடல்களாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டன. அதேவேளையில், இவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உற்பத்தி நிலைக்கு உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Ola m1 cyber racer trademark

ஓலாவின் இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக் தொடங்கி அல்ட்ராவைலட் நிறுவனத்தின் சூப்பர் பைக் மாடலான எஃப்77 எலெக்ட்ரிக் பைக் வரை அவை போட்டியாக இருக்கும். இதனால்தான் ஓலா எலெக்ட்ரிக் பைக்கை பார்த்து அனைத்து நிறுவனங்களும் மிரள தொடங்கி இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்கள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதைப் போல மின்சார இருசக்கர வாகன பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கி இருக்கின்றது. இதை மேலும் வலுவாக்கும் முயற்சியாகவே அது ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து இ-பைக்கின் உற்பத்தியில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 15:18 [IST]
English summary
Ola electric trademarks 6 upcoming electric bikes in india here is more details
மேலும்... #ஓலா #ola #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X