இன்னும் 3 நாள் தான் ஓலா பெரிய சம்பவத்தை பிளான் பண்ணீட்டாங்க! என்ன நடக்கப்போகுதோ?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது புதிய மூவ் ஓஎஸ் 4 அப்டேட்டை வெளியிடுகிறது. இதுபோக தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா என்ன செய்யப்போகிறது என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவன தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.

ola electric launch move os

இந்நிலையில் ஓலா அறிமுகமான நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது புதிய தயாரிப்பாக மூவ் ஓஎஸ்4 அப்டேட்டை வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அப்டேட் ஓலாவின் எஸ் 1 ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த அப்டேட்டில் பார்ட்டி மோடு எக்ஸ்டென்ஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அப்டேட்டின் படி ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கூட்டரில் லைட்டுகளை மியூசிக் ஏற்ப சிங்க் செய்து ஒலிக்க வைக்க முடியும்.

இதுபோக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதியதாக தனது ஸ்கூட்டர்களில் கூடுதலாக மூடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி அதன் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்கிரீனில் மூடுக்கு ஏற்ற போல மாறிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனேவ உள்ள வசதிகள் தற்போது கூடுதலாக சில ஆப்ஷன்கள் அப்டேட் ஆகப்போகிறது.

தற்போது லைட், ஆட்டோ மற்றும் டார்க் மோடுகள் உள்ளன. இன்னும் கொஞ்சம் கூடுதலான மூடுகளையும் இந்த மூவ் ஓஎஸ் 4 உடன் சேரும் என எதிர்பார்க்கலாம். இதுபோக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் ஓலாவிற்கான பிரத்தியேக மேப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த மூவ் ஓஎஸ் 4ல் ஓலாவிற்கான பிரத்தியேக மேப் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப் மூலம் நேவிகேஷன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொழிற்நுட்பம் அறிமுகம் ஆனால் இனி கூகுள் மேப்பை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அடுத்ததாக ஏத்தர் நிறுவனத்தின் டிரிப் பிளானர் வசதி போல ஓலா நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிரிப் பிளானிங் வசதியை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் பயணிக்கும் இடங்களில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனில் எந்தெந்த சார்ஜிங் ஸ்டேஷனில் நீங்கள் சார்ஜ் ஏற்றுக்கொள்ளலாம் என்பதை முன்னரே செட் செய்து வைக்க முடியும்.

அடுத்ததாக ஓலா நிறுவனம் புதிதாக தனது எலெக்ட்ரிக் பைக்கை இந்த ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்த டீசரை போல நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு துணியால் மூடப்பட்ட பைக் இருப்பது தெரிகிறது. தற்போது இது பற்றி தான் சமூகவலைதளங்களில் ஆட்டோ பிரியர்கள் அதிகமாக பேசி வருகின்றனர்.

ஓலா நிறுவனம் ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், தற்போது அந்த பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்த ஆகஸ்ட் 15-ல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அறிமுகம் என்றால் இது ப்ரீ-புரோடெக்ஷன் அல்லது கான்செப்ட் அடிப்படையில் அறிமுகமாக தான் இருக்கும். புரொடக்ஷன் மாடல் அறிமுகம் இன்னும் காலதாமதம் ஆகும் என்று தான் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதியில் தனது அறிமுகத்தை வெளியிடும் நிலையில் இந்தாண்டு அதன் தயாரிப்பிற்காக ஓலா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்துடன் ஓலா ரசிகர்களுக்கும் நல்ல விஷயம் வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 12, 2023, 19:49 [IST]
English summary
Ola electrics ceo teases e motorcycle moveos 4 debut on aug 15
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+