ஓலாவை இனி யாராலும் அசைக்க முடியாது போலிருக்கே.. ஒரே மாசத்துல 27,000 யூனிட்டை எட்டிய விற்பனை!
ஓலா மின்சார இருசக்கர வாகன விற்பனை 2023 மார்ச் மாதத்தில் 27 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே மாதத்தில் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் ஒற்றை நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனம் விற்பனையாவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியாவில் இதற்கு முன்னால் வேறு எந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமும் இந்த அளவு அதிக விற்பனையைப் பதிவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் ஓலா எலெக்டரிக் நிறுவனத்தின் பக்கம் தற்போது திரும்பி இருக்கின்றது. மற்ற நிறுவனங்கள், குறிப்பாக இந்திய நிறுவனங்கள் சில மின்சார வாகனங்களை விற்பனைச் செய்ய குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கின்றன.

மாதம் ஒரு சில ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாவதே பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே 27 ஆயிரம் யூனிட் சேலை ஓலா மார்ச் மாதத்தில் பெற்றிருக்கின்றது. இந்த அதீத விற்பனை எண்ணிக்கையால், "ஓலாவிற்கு மட்டும் எப்படி இந்த அளவு அதிக கஸ்டமர்கள் வந்துக் குவிந்துக் கொண்டிருக்கின்றனர்" என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்பி இருக்கின்றது.
இந்த விற்பனையானது ஒட்டுமொத்த மார்க்கெட்டில் 30 சதவீத பங்கு என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பாரிய அளவு விற்பனை எண்ணிக்கையினால் இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் மாறி இருக்கின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த பதவிலையை ஓலா தக்க வைத்து கொண்டிருக்கின்றது.

அதாவது, தொடர் விற்பனை வளர்ச்சியை ஓலா பெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 மாதங்களாகவே மின்சார இருசக்கர வாகன விற்பனையில் இந்த நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்திய நிறுவனங்களான ஏத்தர் எனெர்ஜி, ஹீரோ எலெக்ட்ரிக் ஆகியவை விற்பனையில் ஓலாவைக் காட்டிலும் பலமடங்கு பின் தங்கி இருக்கின்றது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் ஓலா நிறுவனம், சில சிறப்பு சலுகைகள் மற்றும் ஆஃபர்களை அறிவித்தது. ஓலா எஸ்1 ஏர் மாடலைத் தவிர மற்ற இரண்டு மாடல்களுக்கும் (எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ) சிறப்பு தள்ளுபடி விலைகள் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில், எஸ்1 தேர்விற்கு ரூ. 2 ஆயிரம் வரையிலும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

மார்ச் 8 தொடங்கி மார்ச் 12 ஆம் தேதி வரை என குறுகிய கால சலுகையாக இது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 30 மற்றும் 31 ஆம் ஆகிய தேதிகளில் ஓலா எஸ்1 ப்ரோவிற்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதற்கு 10 ஆயிரம் ரூபா டிஸ்கவுண்ட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் மாதத்தில் அதிக விற்பனையை பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே அறிவிக்கப்பட்டன. இதற்கேற்பவே கடந்த எந்தவொரு மாதத்திலும் இல்லாத அளவு அதிக விற்பனையை 2023 மார்ச்சில் ஓலா எலெக்ட்ரிக் பெற்றிருக்கின்றது. எதிர் காலத்திலும் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக பெரிய அளவில் டிமாண்ட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கேற்ப நிறுவனம் தன்னுடைய வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் பணியில் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. நாடு முழுவதும் அனுபவ மையங்களை திறக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், 50 புதிய எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் நாட்டில் அண்மையில் திறக்கப்பட்டன. அனைத்தும் ஒரே நாளில் திறக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுமட்டுமின்றி அடுத்தடுத்து என புதுமுக தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சிகளையும் ஓலா எலெக்ட்ரிக் மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், அடுத்ததாக 2KWh, 3KWh மற்றும் 4KWh ஆகிய பேட்டரி பேக்குகளைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஓலா.
இந்நிறுவனம் மிக சமீபத்தில் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 ஏர் எனும் மாடலை விற்பனைக்குக் களமிறக்கியது. இதன் டெலிவரி பணிகள் வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 999 க்கு முன்பதிவுகள் ஏற்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஓலா எலெக்ட்ரிக் மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மின்சார கார் மற்றும் பைக் ஆகியவற்றையும் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதற்கான பணியிலேயே நிறுவனம் தற்போது மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் விற்பனையை அதிகரிக்க செய்வதற்கான பணிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications









