ஃபோர்க்-ல எந்த பிரச்சனையும் இல்ல! நாங்க இப்ப மாத்துறதுக்கு என்ன காரணம் தெரியுமா? ஓலா புது விளக்கம்!

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. இன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 இடத்திற்கு வந்துவிட்டது. பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த ஸ்கூட்டர் அறிமுகமானதிலிருந்தே இதன் மீது மக்களுக்கு கிரேஸ் இருந்த நிலையில் தற்போது வரை இந்த கிரேஸ் குறையாமல் இருக்கிறது.

இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டரில் முன்பக்க ஃபோர்க் உடைந்து போவதாக அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து பலர் அதிருப்தி தெரிவித்தனர். இது ஓலா நிறுவனத்திற்கு சற்று கெட்ட பெயரைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓலா நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

ஃபோர்க்-ல எந்த பிரச்சனையும் இல்ல! நாங்க இப்ப மாத்துறதுக்கு என்ன காரணம் தெரியுமா? ஓலா புது விளக்கம்!

அதன்படி ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 பயனர்கள் தங்கள் விரும்பினால் அவர்கள் ஸ்கூட்டரில் உள்ள முன்பக்க சஸ்பென்ஸை இலவசமாகவே அந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சஸ்பென்சனை கொண்டு உருவாக்கித் தருவதாகத் தெரிவித்திருந்தது. இந்த செய்தி வெளியான நிலையில் ஓலா நிறுவனத்தின் சஸ்பென்சனில் பிரச்சனை எனத் தகவல்கள் பரவியது.

முன்பக்க ஃபோர்க்கில் பிரச்சனை இருப்பதால் தான் ஓலா நிறுவனம்
இதை இலவசமாக மாற்றித் தர வாகனங்களைத் திரும்ப அழைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஓலா நிறுவனம் மறுத்து அவர்களது பிளாக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி ஓலா நிறுவனம் இதைத் திருப்ப அழைக்கும் நிகழ்வு இல்லை என விளக்கமளித்துள்ளது.

இந்நிறுவனம் அளித்த விளக்கத்தில் ஓலா நிறுவனம் கிட்டத்தட்ட 2 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவிட்டது. ஆனால் இதுவரை வெறும் 218 ஸ்கூட்டரில் மட்டும்தான் இந்த முன்பக்க ஃபோர்க் உடைந்துவிட்டதாகப் புகார்கள் வந்துள்ளது. அதில் 184 சம்பவங்கள் விபத்துக்கள் காரணமாக உடைந்தது. 34 சம்பவங்களுக்கான காரணம் தான் குழப்பமாக இருக்கிறது

மொத்தம் உள்ள 2 லட்சத்தில் 34 ஸ்கூட்டரில் இந்த பிரச்சனை என்றால் கூட 0.015 சதவீத ஸ்கூட்டர்கள் தான் இந்த பிரச்சனையைச் சந்தித்துள்ளன என விளக்கம் அளித்துள்ளது. மேலும் தற்போது புதிய ஃபோர்க் ஏற்கனவே உள்ள ஃபோர்க்கை ரீ இன்ஜினியரிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது தான் என்றும்.

இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே தயாராகிவிட்டதாகவும், இதற்கான டூலிங் டெஸ்டிங் மற்றும் வேலிடேஷன் ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்ததாகவும், இதன் தயாரிப்பு ஜனவரியில் துவங்கியது என்றும் அதன்பிறகு தான் இந்த அறிவிப்பு வெளியானது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த சம்பவங்களுக்கு முன்னரே இந்த மாற்றம் முடிவு செய்யப்பட்டு விட்டது என விளக்கமளிக்கிறது.

முதலில் தயாரிக்கப்பட்டது 75 சதவீத பாதுகாப்பு மார்ஜின் தான் இருந்தது தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டது 250 சதவீத பாதுகாப்பு மார்ஜின் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. இந்த முன்பக்க ஃபோர்க்கை மாற்றுவது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆப்ஷன் தான். இதற்கு ஏற்கனவே இருக்கும் ஃபோர்க் தரமற்றது என்பது அர்த்தமல்ல எனவும் விளக்கமளித்துள்ளது.

மேலும் அவர்கள் அளித்த விளக்கத்தில் எந்த நிறுவனமும் இவ்வளவு குறைவான ஃபெயிலியர் ரேட் இருக்கும் பிரச்சனைக்காக
முழு வாகனங்களையும் திரும்ப அழைக்க மாட்டார்கள். மேலும் இது ஃபெயிலியர் தான் எனத் தெரிந்து கொள்ளும் அளவிற்குக் காலமும் வரவில்லை வருங்காலத்தில் இந்த பிரச்சனை அதிகமாகப் பதிவானால், ஃபெயிலியர் சதவீதம் அதிகமானால் திரும்ப அழைக்கப்படலாம்.

புதியதாக அப்கிரேடு செய்வது முற்றிலும் வாடிக்கையாளர் விருப்பம்தான் தற்போது உள்ள முன்பக்க ஃபோர்க் எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பயப்பட்டால் தொடர்ந்து ஏற்கனவே உள்ள முன்பக்க ஃபோர்க்கில் தொடர வேண்டும் என்றாலும் தொடரலாம். இது முற்றிலும் உங்கள் வாடிக்கையாளர் விருப்பம் தான் என விளக்கமளித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 18:30 [IST]
English summary
Ola explains front suspension change is not a recall know full details
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+