ஒட்டுமொத்த பெட்ரோல் வாகனங்களுக்கும் எண்டு கார்டு போட இருக்கும் ஓலா.. டீசருக்கே ஹோண்டா-ஹீரோ 2மே பதறி இருக்கும்!
'ஐசிஇ ஏஜ்' (ICE Age) வாகனங்களுக்கு என்ட் கார்டு போடக் கூடிய புதுமுக தயாரிப்பை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் புதிய டீசர் ஒன்றையே வெளியிட்டு இருக்கின்றது.
விரைவில் இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசல் என எரிபொருளில் ஓடக் கூடிய ஐசிஇ வாகனங்கள் அனைத்தும் அகற்றப்படும் என கூறப்படுகின்றது. இதனை ஓலாவும் மிக தீவிரமாக நம்புகின்றது. இந்த நம்பிக்கையின் எதிரொலியாக தன்னுடைய தயாரிப்புகளை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் அது களமிறங்கி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே, நிறுவனம் விரைவில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரவிருப்பதை தன்னுடைய டீசர் வாயிலாக தெரிவித்திருக்கின்றது. இந்த டீசரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வே பகிர்ந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கின் வாயிலாகவே டீசர் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
அந்த படத்தில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஹெட்லைட் ஒளிர்ந்துக் கொண்டிருப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், 'என்ட் ஐஸ் ஏஜ், பார்ட்-1, ஜூலை 2023 என்கிற வாசகமும், புதிதாக வரவிருக்கும் இந்த இ-வாகனம் இந்தியாவின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் டான் ஆக இருக்கும் என்கிற வாசகமும் இடம் பெற்றிருக்கின்றது.
இந்த பதிவை திரித்து பார்க்கையில், ஐஸ் ஏஜ் பாகம் 1-ஐ விரைவில் முடிவிற்குக் கொண்டு வர இருப்பதும், புதிய தயாரிப்பை ஜுலை மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதில் ஐஸ் என்பது ஐசிஇ, அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளில் ஓடக் கூடிய வாகனங்களை குறிக்கும் சொல் ஆகும்.
ஓலா இப்போது எஸ்1 ப்ரோ, ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடனேயே விரைவில் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்று இணைக்கப்பட இருக்கின்றது. இதனை ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஓலா எலெக்ட்ரிக் சிஇஓ பவிஷ் அகவர்வால் டுவிட்டரில் பதிவிட்டிருக்கின்றார். நிறுவனம் விற்பனைச் செய்துக் கொண்டிருப்பதிலேயே விலைக் குறைவான மாடலாக எஸ்1 ஏர் இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடனேயே புதிய தயாரிப்பை நிறுவனம் விரைவில் இணைக்க இருக்கின்றது.
இதையே சூசகமாக தனது டீசர் படம் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்திருக்கின்றது. புதுமுக தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஓலா, அதன் உடன் சேர்த்து தன்னுடைய எஸ்1 ஏர் இ-ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளை தொடங்குவதற்கான பணிகளிலும் அது தீவிரம் காட்டி வருகின்றது.
நிறுவனத்தின் மலிவு விலை மின்சார இருசக்கர வாகனமாக எஸ்1 ஏர் உள்ளது. இந்த வாகனத்திற்கான முன் பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ. 1.09 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட தேர்வாக எஸ்1 ப்ரோ உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 1.39 லட்சம் ஆகும். அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இவற்றுடனேயே விரைவில் புதிய இ-ஸ்கூட்டர் இணைக்கப்பட இருக்கின்றது. இந்த புதுமுக வாகனம் என்ன மாதிரியான அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது துள்ளியமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அது இப்போது விற்பனையில் இருக்கும் ஓலாவின் பிற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக சிறப்புகள் கொண்டதாக இருக்கும் என தெரிகின்றது. நிறுவனத்தின் இப்போதைய டீசர் படம் அதை விளக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சூழலிலேயே தன்னுடைய புதிய ஏஜ் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஓலா களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் அங்கீகரிக்கப்படாத தலைவனாக ஓலா இருக்கின்றது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே நிறுவனத்தின் புதிய வாகனங்களை களமிறக்கும் செயல் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








