ஓலா கிட்ட இருந்து இப்படியொரு நியுஸ தான் எதிர்பார்த்து இருந்தோம்!! சரியான டைம்ல வந்துடுச்சு!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இந்த தீபாவளியை முன்னிட்டு அதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், இன்னும் சில வாரங்களுக்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மிக பெரிய இவி நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக்கை சொல்லலாம். அந்த அளவிற்கு, இந்தியா முழுவதும் பெரும்பாலான நகரங்களில் நெட்வொர்க்கை ஓலா விரிவுப்படுத்தி உள்ளது. இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது என்றாலும், வாகன உற்பத்தி தொழிற்சாலை நம் தமிழ்நாட்டில் ஓசூருக்கு அருகே உள்ளது.

ola limited period diwali offers

இந்த நிலையில், நெருங்கிவரும் தீபாவளியை முன்னிட்டு மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ஓலாவும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் தற்சமயம் பாரத் இவி என்கிற பெயரில் ஓர் விழாவை கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தீபாவளி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஓலாவின் தீபாவளி சலுகையின் மூலம் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.26,500 வரையிலான சலுகைகள் உடன் வாங்க முடியும். இந்த ரூ.26,500 வரையிலான சலுகைகளில் இலவசமாக பேட்டரிக்கான உத்தரவாதத்தை நீட்டித்து கொள்ளுதல், எக்ஸ்சேன்ஞ் போனஸ், விரிவான உத்தரவாதத்திற்கு அதிக தள்ளுபடிகள், பணம் தள்ளுபடி மற்றும் பிளெக்ஸிபிளான ஃபைனான்ஸ் டீல்ஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ola limited period diwali offers

இதில் இலவச பேட்டரி வாரண்டி அதிகரிப்பு சலுகை ஆனது ஓலாவின் விலைமிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 புரோ ஜென்ரேஷன் 2க்கு மட்டுமே ஆகும். வழக்கமான இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை நீட்டிக்க விரும்பினால், ரூ.7,000 வரையில் செலுத்த வேண்டியிருக்கும். ஓலாவின் விலை குறைவான எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இதே பேட்டரி வாரண்டிக்கு 50% கட்டணத்தை மட்டும் செலுத்தினாலே போதும்.

அதேபோல், ஓலா எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் விரிவான வாரண்டியை பெறவும் வழக்கமான கட்டணத்தில் (ரூ.9,000) 50% செலுத்தினாலே போதுமானது. எஸ்1 புரோ ஜென்-2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த வாராண்டியை பெற வெறும் ரூ.2,000 செலுத்தினாலே போதும் என ஓலா தெரிவித்துள்ளது. பழைய பெட்ரோல் 2-வீலரை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் முறையில் ஓலா இ-ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கும் சலுகைகள் உள்ளன.

ola limited period diwali offers

பழைய பெட்ரோல் 2-வீலரை கொடுத்து ஓலா எஸ்1 புரோ ஜென்-2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோர் ரூ.10,000 வரையிலும், எஸ்1 ஏர் அல்லது எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரூ.5,000 வரையிலும் எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம். அத்துடன், எஸ்1 ஏர், எஸ்1 எக்ஸ்+ மற்றும் எஸ்1 புரோ ஜென்-2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ.2,000 பணம் தள்ளுபடியும் கிடைக்கும். இவை மட்டுமின்றி, குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரேடிட் கார் பயனாளர்கள் ரூ.7,500 வரையில் தள்ளுபடிகளையும் பெற முடியும்.

இவற்றுடன், ஜீரோ டவுன் பேமண்ட், நோ-காஸ்ட் இஎம்ஐ, ஜீரோ-பிராசெஸ்ஸிங் கட்டணம் மற்றும் 5.99%-இல் குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற ஓலா வழக்கமாக அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கும் ஃபைனாஸ் உதவிகளையும் பெறலாம். இவை இல்லாமல், லக்கி-பூட் ஆஃப்பர் என்கிற பெயரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ரைடு செய்து பார்ப்பவர்கள் எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக தட்டிச் செல்லும் வாய்ப்பையும் ஓலா வழங்குகிறது.

ola limited period diwali offers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி சமயத்தில்தான் மழையினால் படுத்துப்போன அனைத்து வணிகங்களும் தலைத்தூக்க ஆரம்பிக்கும். இதனாலேயே, ஆட்டோமொபைல் துறையிலும் கடந்த சில வாரங்களாக அதிகளவில் சலுகைகளை பார்க்க முடிகிறது. இந்த வரிசையில், ஓலா தற்போது அறிவித்துள்ள சலுகைகள் ஓலா நிறுவனத்துக்கும் பெரியதாக வருவாய் இழப்பை ஏற்படுத்தாதவாறு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 15:46 [IST]
English summary
Ola limited period offers for diwali check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X