தன் வாடிக்கையாளர்களுக்கு செம அப்டேட்டை கொடுத்த ஓலா! இப்ப எல்லாரும் வானத்துக்கும் பூமிக்கு குதிக்கிறாங்க!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது மூவ் 4 பீட்டா வெர்ஷன் அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க துவங்கி விட்டது. கடந்த 15ஆம் தேதியே இந்த அப்டேட் வழங்கும் பணி துவங்கி விட்டது. அதன்படி சில ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர்கள் இந்த அப்டேட்டை பெற்றுள்ளனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் ஓலா. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்யும் நிறுவனமாக ஓலா இருக்கிறது.

ola move os 4 rollout

இந்நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக மூவ் ஓஎஸ் என்ற தளத்தை தங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிறுவி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி வருகிறது. இந்த ஓஎஸ்-ல் அவ்வப்போது அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஓஎஸ்-ன் நான்காவது தலைமுறை அப்டேட் வழங்கப்படும் என ஓலா நிறுவனம் அறிவித்திருந்தது.

அந்நிறுவனம் அறிவித்தபடி கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இதன் பீட்டா வெர்ஷனை ஒலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக வழங்க துவங்கி விட்டது. இதன்படி சில வாடிக்கையாளர்கள் தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள ஓஎஸ்-ஐ அப்டேட் செய்து அதை பயன்படுத்தி வருகின்றனர்.

ola move os 4 rollout

இந்த அப்டேட்டில் ஓலா நிறுவனம் புதிய மேப் நேவிகேஷன் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேப் நேவிகேஷன் சிஸ்டத்திற்காக ஓலா நிறுவனம் மேப் மை இந்தியா நேவிகேஷன் என்ற சாப்ட்வேரை பயன்படுத்துகிறது. இது கூகுள் மேப் சாப்ட்வேருக்கு போட்டியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் ஆகும். ஓலா நிறுவனமும் முதலில் கூகுள் மேப் சாப்ட்வேரை தான் பயன்படுத்தி வந்தது. தற்போது அதை மேப் இந்தியா சாஃப்ட்வேருக்கு மாறியுள்ளது.

இந்த மேப் மை இந்தியா, மேப் நேவிகேஷன் சாஃப்ட்வேரும் கூகுள் மேப்பில் உள்ளதை போல நீங்கள் பயணிக்கும் இடத்தை சுற்றி உள்ள பகுதிகள், நீங்கள் பயணிக்கும் இடத்திற்கு எத்தனை மணிக்கு போவீர்கள் என்ற உத்தேச கணிப்பு, பயணம் செய்யும் பாதையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதற்கு மாற்று பாதையை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தானியங்கியாக செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த அப்டேட்டில் மேப் போக சில புதிய அம்சங்களையும் ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானது அட்வான்ஸ் ஸ்கூட்டர் கண்ட்ரோல் ஆகும். இதுபோக ரைடரின் டெம்பரை கண்காணிக்கும் கருவி, ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ,கான்செர்ட் மோட், ரைடர் பைக்கில் இருந்து கீழே விழுந்தால் அலர்ட் செய்யும் கருவி, பயோமெட்ரிக் ஆப்லாக்,எக்கோ மோடில் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய அப்டேட்டாக ஒவ்வொரு ஸ்கூட்டர் உரிமையாளர்கள் விரும்பும் வகையில்பிராக்சிமிட்டி கண்ட்ரோலை செட் செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. இதுபோக டர்ன் இன்டிகேட்டரை ஆட்டோமெட்டிக்காக கட் செய்யும் வசதியும், புதிய ட்ரீப் மீட்டரும், ஹெட் போனில் மியூசிக் மற்றும் கால் பேசுவதற்கான கண்ட்ரோலையும், டேக் மீ ஹோம் லைட்கள் மற்றும் நமக்குப் பிடித்த கான்டாக்ட்களை மட்டும் சேமிக்கும் ஆப்ஷனும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இதை இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டரில் டார்க் மோட் அம்சமும் இருக்கிறது. இதுபோக இந்த ஸ்கூட்டரில் மல்டி லெவல் வாகன ரீஜெனரேஷன், கால் செட்டிங்ஸ் மற்றும் வெக்கேஷன் மோடு ஆகியவை புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தற்போது பீட்டா வெர்ஷனாக மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இதன் முழு வெர்ஷன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான அப்டேட்டை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதன் படி தற்போது மூவ் ஒஎஸ் 4 ஓலா வாடிக்கையாளர்கள் அதிகமான பலன்களை பெற உள்ளார்கள். வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை எல்லாம் போல நிறுவனம் தனது அப்டேட்டில் கொண்டு வருவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது தான்.

More from DriveSpark

Article Published On: Monday, September 18, 2023, 15:15 [IST]
English summary
Ola move os 4 beta update started rolling out includes new navigation feature
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+