கிராமத்தை நோக்கி படையெடுக்கப்போகும் ஓலா! சிட்டில பண்ணது மாதிரி இனி ஒவ்வொரு கிராமத்துலயும் பண்ண போறாங்க!

சின்ன சின்ன ஊர்களிலும் ஓலா ஷோரூம்களை திறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஓலா நிறுவனம் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடிக்க இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது மிகப்பெரிய எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையாளராக ஓலா நிறுவனம் மாறியுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டு மொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மட்டும் 40 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. இதை 60-70 சதவீதமாக மாற்ற அந்நிறுவனம் புதிய முயற்சிகளை எடுக்கக் களம் இறங்கியுள்ளது.

ola experience center in tier 2 cities

இந்நிறுவனம் எப்பொழுது எக்ஸ்பிரியன்ஸ் சென்டர் ஷோரூம்களை திறந்ததோ அப்பொழுது முதல் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகமானது. இதனால் தொடர்ந்து எக்ஸ்பிரியன்ஸ் சென்டர் ஷோரூம்களை திறக்க துவங்கியது. சமீபத்தில் தனது 500வது ஷோரூமை ஸ்ரீ நகரில் திறந்தது. இதன் மூலம் ஓலா நிறுவனம் எக்ஸ்பிரியன்ஸ் சென்டர் திறக்கப்பட்ட இடங்களில் ஓலா விற்பனை அதிகரித்ததை உணர முடிந்தது.

முதல் 500 சென்டர்களில் பெரும்பாலும் பெருநகரங்களைக் குறி வைத்தே எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சில சென்டர்களை மட்டும் டயர் 2 நகரங்களான தமிழகத்தின் திருப்பூர் நகரம், கேரளாவின் எர்ணாகுளம், கர்நாடகாவின் பெல்காம், தும்கூர் போன்ற நகரங்களில் சென்டர்களை திறந்தது.

ola experience center in tier 2 cities

இந்நிலையில் இந்நிலையில் பெங்களூரு, புனே,சூரத் ஆகிய பெரு நகரங்களில் ஓலா ஸ்கூட்டர்கள் 35-40 சதவீத பங்கைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் திருப்பூர், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளிலும் 35-40 சதவீத மார்கெட் பங்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது. இதனால் அடுத்த எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை இந்தியாவின் டயர் 2 நகரங்களில் அமைக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்சூல் காந்தெல்வால் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறு சிறு நகரங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மார்கெட் பங்கு 1-2 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இதை ஓலா கைப்பற்றினால் 8-10 சதவீதமாக இது உயரும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த சில மாதங்களில் சின்ன சின்ன ஊர்களிலும் ஓலா எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஓலா நிறுவனம் மாதம் 30 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கதுட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தொடர்ந்து 8வது மாதமாக இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஓலா மாறியுள்ளது. மார்கெட்டில் ஓலாவிற்கு போட்டியாக, ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக், ஓகினவா ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தைப் பொருத்தவரை புதிய அனுபவ மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது. இத்தனை மாடல்களும் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல ஓலா பைக்குகளையும் வெளியிட முடிவு செய்துள்ளது. அதில் ஸ்போர்ட்ஸ் பைக், அட்வெஞ்சர் டூரர் பைக், ரோடு பைக்,க்ரூஸர் மற்றும் மாஸ் மார்கெட் பைக்குகளை விற்பனைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரம் ஓலா காருக்கான பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் டிமாண்டிற்கு ஏற்றார் போல சப்ளையை அதிகரித்துள்ளது. ஏத்தர் போன்ற நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பை அதிகரித்தால் தான் விற்பனையில் வளர்ச்சியைச் சந்திக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 16, 2023, 16:00 [IST]
English summary
Ola plans to expand their experience center in tier 2 cities in india
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+