கம்மி ரேட் ஓலா ஸ்கூட்டர் டெலிவரிய எப்ப ஆரம்பிக்க போறாங்க தெரியுமா?

ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி வரும் ஜூலை மாதம் துவங்கியது. இதை அந்நிறுவனம் சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு அந்த தகவலை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மாதம் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மார்கெட்டில் களம் இறக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் இருக்கிறது.

ola s1 air delivery

இந்நிலையில் ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் குறைந்த விலை வெர்ஷனாக ஓலா எஸ்1 ஏர் என்ற ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட போதே இதற்கான புக்கிங்கும் துவங்கியது. தற்போது புக்கிங் பரபரப்பாக நடந்துவரும் நிலையில் இதற்கான டெலிவரி எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பைக்கை தான் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தில் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டில் இந்த ஸ்கூட்டர் உங்களுக்கு ஜூலை மாதம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரிக்காக காத்திருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.

ஓலா நிறுவனம் இந்த எஸ்1 ஏர் ஸ்கூட்டரை மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது குறைந்த வேரியன்டாக 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட வேரியன்ட் ரூ84,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட வேரியன்ட் ரூ99,999 என்ற விலையிலும், 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட் ரூ1.09 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

இந்த பேட்டரியால் ஒவ்வொரு வேரியன்டிற்கும் ரேஞ்ச் மட்டுமே மாறுபடுகிறது. மோட்டாரை பொருத்தவரை ஒரே 4.5 கிலோ வாட் மோட்டார் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 85 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது. இதில் 2 கிலோ வாட் ஹவர் பேட்டரி வேரியன்ட் 85 கி.மீ வரையிலும், 3 மற்றும் 4 வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர்கள் முறையே 125 கி.மீ மற்றும் 165 கி.மீ ரேஞ்சை தரக்கூடியது.

இந்த ஸ்கூட்டரின் லுக் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய ஸ்கூட்டரை போன்ற லுக்கிலேயே இருக்கிறது. இதில் மொத்தம் 5 பெயிண்ட் ஸ்கீம்கள் இருக்கிறது. கோரல் கிளாம், நியோ மிண்ட், ப்ரோக்கிலீன் ஒயிட், ஜெட் பிளாக் மற்றும் லிக்யூட் சில்வர் ஆகிய நிறங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது.

தீபாவளி நேரத்தில் 2.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஸ்கூட்டருக்கான ரிசர்வேஷன் நடந்தது. அப்பொழுது ரிசர்வ் செய்தவர்களுக்கு 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட ஸ்கூட்டர் வேறு எந்த விதமான கூடுதல் பணமும் இல்லாமல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலாவின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குறைந்த விலையில் ஓலா ஸ்கூட்டரை வாங்க நினைத்தவர்கள் பலர் இந்த ஸ்கூட்டரைபுக் செய்து டெலிவரிக்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் ஓலா சிஇஓ போட்ட ட்வீட் வாயில் இனிப்பைப் போட்டது போலத் தான் இருந்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 21:00 [IST]
English summary
Ola plans to start s1 air delivery in july ceo conforms
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+