ஸ்கூட்டர்னாலே இனி ஓலா தான் ரோட்ல ஓடும் போல! மே மாசம் மட்டும் எத்தனை பேர் வாங்கி குவிச்சிருக்காங்கனு பாருங்க!

ஓலா நிறுவனம் தனது மே மாத விற்பனை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் வேறு எந்த மாதமும் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் 35,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை ஓலா நிறுவனம் பிடித்துள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எலெக்ட்ரிக் ஸ்கூடர்களை தயாரிக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவன தயாரிப்புகளை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர்.இந்நிறுவன தயாரிப்புகளை மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாங்கி வருகின்றனர்.

ola sales may 2023

இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதல் மக்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக அதிகமாகத் துவங்கியது. இந்த ஸ்கூட்டர் காண புக்கிங் துவங்கிய போது ஏகப்பட்ட மக்கள் ஸ்கூட்டரை புக்கிங் செய்தனர். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் இந்த கூட்டணியின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில் ஜூன் மாதம் துவங்கி உள்ள நிலையில் கடந்த மே மாதத்திற்கான விற்பனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஓலா நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 35,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை இதுவரை அந்நிறுவனம் சந்திக்காத மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியாகும்.

ola sales may 2023

இந்த விற்பனையின் மூலம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகன விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டின் மே மாத விற்பனையை ஒப்பிடும்போது கடந்த மே மாதம் 300 சதவீதம் விற்பனை அதிகமாகி உள்ளது. இந்தியாவில் விற்பனையான ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 30 சதவீத மார்க்கெட் பங்கை ஓலா நிறுவனமே வைத்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பாவேஷ் அகர்வால் கூறும் போது:"ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீப காலமாக மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் இவி புரட்சிக்கு ஓலா நிறுவனம் வித்திட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியாவில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் தொழில்நுட்பத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை இது உறுதி செய்துள்ளது.

ஓலா நிறுவன தயாரிப்புகளின் விலை கடந்த ஜூன் மாதம் முதல் அதிகமாகியுள்ளது. மத்திய அரசு ஃபேம் 2 திட்டத்தின் மானியத்தைக் குறைத்ததால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து இந்தியாவில் கொண்டுதான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் " என கூறினார்.

ஜூன் 1ம் தேதி முதல் ஒலா வாகனங்களின் விலை அதிகமாகி உள்ள நிலையில் தற்போது ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1,39,999என்ற விலையிலும் ஓலா எஸ் ஒன் 3 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1,29,999 என்ற நிலையிலும் ஓலா எஸ்1 ஏர் 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1,09,999என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

டிரைவிங் ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அளவுக்கு மிகப்பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது இதற்கு ஓலா நிறுவனம் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகை இல்லை. தரமான தயாரிப்புகளுக்கு எப்பொழுதுமே இந்தியாவில் அதிகமான டிமாண்ட் இருக்கும் என்ற கூற்றை ஓலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஓலா போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் முன்னணியில் இருப்பது எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட்டிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

More from DriveSpark

Article Published On: Friday, June 2, 2023, 21:00 [IST]
English summary
Ola recorded highest ever sales may 2023
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+