தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் பாக்ஸைபோல எல்லாரும் இந்த இ-ஸ்கூட்டரை வாங்கி இருக்காங்க! டோட்டல் இந்தியாவே ஆச்சரியப்படுது!

இந்தியாவின் மாபெரும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) உருவெடுத்து இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு என்பது ஏகபோகமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த காரணத்தினாலேயே இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் மாறி இருக்கின்றது.

சென்ற நவம்பர் மாதத்தில்கூட இந்த நிறுவனம் இமாலய விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் 30 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

Ola sales

இந்த தகவலை வாஹன் (Vahan) தளமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. பொதுவாக தீபாவாளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத இறுதி மற்றும் நவம்பர் மாதத்தில் மிக அதிகளவில் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகும். இந்த நிலையிலேயே இந்த இமாலய விற்பனையை ஓலா எலெக்ட்ரிக் பெற்றிருக்கின்றது.

இதற்கு முன்னதாக இந்த அளவுக்கு நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகியதே இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 2023 நவம்பரில் கிடைத்திருப்பது முந்தைய அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கையாகும். இதேபோல், சென்ற ஆண்டு நவம்பருடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு நவம்பரில் கிடைத்திருப்பது 82 சதவீத அதிக விற்பனையாகும்.

Ola register 82 percent sales growth

இத்தகைய மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதனாலேயே ஒட்டுமொத்த இந்திய வாகனமும் ஓலா எலெக்ட்ரிக்-கைப் பார்த்து வாயை பிளக்கச் செய்திருக்கின்றன. நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஏர், இந்த இரண்டு மின்சார ஸ்கூட்டர்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

இரண்டும் மிக சிறந்த மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகும். மிக முக்கியமாக எஸ்1 ஏர் ஓலாவின் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 1.19 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதேவேளையில், எஸ்1 ப்ரோ இரண்டாம் தலைமுறை வெர்ஷனோ ரூ. 1.47 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இரண்டை விட மற்றுமொரு மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எஸ்1எக்ஸ்-தான் அது ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ்1எக்ஸ் பிளஸ், எஸ்1எக்ஸ் (3kWh) மற்றும் எஸ்1எக்ஸ் (2kWh) ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்றில் எஸ்1எக்ஸ் (2kWh) தேர்வே மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் விலை ரூ. 89,999 ஆகும். இதற்கு அடுத்தபடியாக எஸ்1எக்ஸ் (3kWh) ரூ. 99,999-க்கு விற்கப்படுகின்றது. எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்வின் விலை ரூ. 1,09,999 ஆகும். இந்த வாகனங்களுக்கான முன்பதிவு ரூ. 999 என்கிற மலிவான கட்டணத்தில் ஏற்கப்பட்டு வருகின்றது. இதுபோன்ற மலிவு விலையில் ஓலாவின் தயாரிப்புகள் விற்கப்படுவதனாலேயே அது விற்பனையில் முன்னணியில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஓலா மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது. இந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டுமல்ல அதற்கு முந்தைய மாதங்களிலும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையையே பெற்றிருக்கின்றது. இதன் விளைவாகவே தொடர்ச்சியாக ஓலா எலெக்ட்ரிக் இந்தியா மின்சார இருசக்கர வாகன உலகின் மகுடும் சூடப்படாத கிங்காக மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 1, 2023, 19:28 [IST]
English summary
Ola register 82 percent year to year sales growth in nov 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+