தெருவுக்கு ஒருத்தர் வாங்குறாங்க போல!! ஓலாவை கையில் பிடிக்க முடியல - கூரையை பிச்சிக்கிட்டு இலாபம் கொட்டுது!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதுவரையில் இல்லாத உச்சமாக இந்த அக்டோபர் மாதத்தில் 24,000 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகளின் மூலமாக இது சாத்தியமாகி உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வருட இறுதி பண்டிகை நாட்கள் கலைக்கட்ட துவங்கி உள்ளன. இந்திய கலாச்சாரத்தின் முக்கிய பண்டிகைகளான நவராத்திரி மற்றும் தசரா உள்ளிட்டவை கடந்த அக்டோபர் மாதத்திலேயே முடிந்துவிட்ட நிலையில், அடுத்து தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. பொதுவாகவே, இவ்வாறான பண்டிகை நாட்களில் தான் வழக்கத்தை விட கூடுதலாக வாகனங்களை வாங்க நம் மக்கள் விரும்புவர்.

ola registers 24000 scooter sales

இந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்திலும் இந்தியாவில் ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனை அதீத முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் சமீப காலத்தில் வெகுவாக வளர்ச்சி அடைந்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தியுள்ளது.

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த அக்டோபர் மாதத்தில் ஏறக்குறைய சுமார் 24,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது, நடந்து முடிந்த நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகளினால் சாத்தியமானதாகவும் தனது அறிக்கையில் ஓலா குறிப்பிட்டுள்ளது. இந்த 24,000 விற்பனை எண்ணிக்கை ஆனது இந்த அக்டோபரில் விற்பனையான மொத்த எலக்ட்ரிக் வாகன எண்ணிக்கையில் 35% பங்கு எனவும் ஓலா கூறியுள்ளது.

ola registers 24000 scooter sales

மேலும், 24,000 விற்பனை எண்ணிக்கை ஆனது ஓலா நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு நவராத்திரி & தசரா பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை விட 2.5 மடங்கு அதிகமாகும். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம், எஸ்1 எக்ஸ், எஸ்1 ஏர், எஸ்1 புரோ மற்றும் எஸ்1 புரோ ஜென் 2 என 4 விதமான வேரியண்ட்களில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குறித்து ஓலாவின் முதன்மை நிர்வாக இயக்குனர் அன்ஷுல் காண்டெல்வால் கூறுகையில், "எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பண்டிகை காலம் நம்ப முடியாததாக உள்ளது மற்றும் நவராத்தி மற்றும் தசரா காலத்தில் விற்பனையில் வலுவான உயர்வை கண்டோம்.

ola registers 24000 scooter sales

உற்சாகமான பண்டிகை சலுகைகள் மற்றும் ஓலா ஸ்கூட்டர்களின் பரந்த போர்ட்ஃபோலியோ மூலம் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக ஓலா மாறியுள்ளது. தீபாவளி நெருங்கி வருவதால், விற்பனை வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஓர் மைல்கல் ஆண்டாக அமையும்" என தெரிவித்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலங்களில் சலுகைகளும், தள்ளுபடிகளும் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதற்கு ஓலாவின் இந்த விற்பனை முன்னேற்றத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சலுகைகளை கொடுப்பது மட்டும் முக்கியமல்ல, அதனை எந்த சரியான நேரத்தில் கொடுக்கிறோம் என்பதுதான் அதைவிட முக்கியம். அதனை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மிக சரியாக செய்துள்ளது. இதற்கு கைமேல் பலன் தான் 24,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 19:14 [IST]
English summary
Ola registers 24000 electric scooter sales in october
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X