ஜூலை முதல் பெட்ரோல் ஸ்கூட்டர்களை யாரும் வாங்கமாட்டாங்க! வீடியோ வெளியிட்டு ஆருடம் சொன்ன ஓலா சிஇஓ
ஓலா நிறுவனம் தனது எஸ்1ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரியை வரும் ஜூலை மாதம் துவங்கவுள்ள நிலையில் இந்த ஸ்கூட்டர் எப்படி உருவானது என்ற வீடியோவை அந்நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரும் புரட்சியையே செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தையும் யாராலும் எட்டி பிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியையும் பெற்று வருகிறது. இந்நிறுவனம் குறைந்த விலையில் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்து ஓலா எஸ்1 ஏர் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரை பொருத்தவரை நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து வந்த ஸ்கூட்டராகும். இந்நிலையில் இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்கை துவங்கிவிட்டது. ஏராளமான மக்கள் இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்கை செய்து வருகின்றனர். முதலில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் பின்னர் ஃபேம் 2 மானியம் குறைக்கப்பட்டதால் விலை அதிகரிக்கப்பட்டது.
மேலும் 2 கிலோ வாட் ஹவர் மற்றும் 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி வெர்ஷன்களை ஓலா நிறுவனம் நிறுத்தியது. தற்போது 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உடன் தான் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ இந்த ஸ்கூட்டர் எப்படி உருவாக்கப்பட்டது என்ற ஒரு வீடியோ ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவில் ஓலா நிறுவனம் தங்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு கனவு ஸ்கூட்டராக வடிவமைத்ததாகவும், இந்த கனவை நினைவாக்க ஓலா இன்ஜினியர்கள் 12 மாதங்கள் வரை உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக ஊழியர்கள் உழைப்பு மட்டுமல்ல ரோபோக்களையும் பயன்படுத்தியுள்ளனர். இறுதியாக ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரை வெற்றிகரமாக வடிவமைத்து முடித்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஸ்கூட்டர் வரும் ஜூலை மாதம் டெலிவரி துவங்கும் எனவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஓலா எஸ்1 ஏர் தயாரிக்கப்பட்ட போது ஆலையில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் சேர்த்து எடிட் செய்யப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ஓலா ரசிகர்களையும் இந்த ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரை புக் செய்தவர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்ட பவீஷ் அகர்வால் அந்த ட்வீட்டில் ஒரு கணிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் ஜூலை மாதத்தில் இந்த ஸ்கூட்டரின் டெலிவரி துவங்கிய பின்பு ஓலா நிறுவனத்தின் கொள்கையான ஐசிஇ இன்ஜின் வாகனங்களுக்கான முடிவு ஸ்கூட்டர்களில் எழுதப்பட்டு விடும் எனக் கூறுகிறார். அதாவது மக்கள் பெட்ரோல் ஸ்கூட்டர்களை வாங்காமல் இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் வாங்குவார்கள் எனக் கூறுகிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட அதிகமாக இருக்கிறது. விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக பலர் காத்திருக்கின்றனர. ஓலா எஸ்1 ஏர் அவர்களுக்கு நிச்சயம் ஒரு வரபிரசாதம் தான்.


Click it and Unblock the Notifications








