சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ஓடும்! நாடே தவம் கிடந்த ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது! உண்மையாவே இதாங்க விலை!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெகு சமீபத்தில் எஸ்1 ஏர் (Ola S1 Air) என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புத்தம் புதிய எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் இன்றுதான் (ஆகஸ்ட் 23) தொடங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நகரங்களில் படிப்படியாக டெலிவரி தொடங்கப்படும். ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 151 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அட்டகாசமான ரேஞ்ச் (Range) என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அதே நேரத்தில் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அவை ஸ்டெல்லர் ப்ளூ, நியான் க்ரீன், ஒயிட், கோரல் க்ளாம், லிக்யூட் சில்வர் மற்றும் மிட்-நைட் ப்ளூ ஆகியவை ஆகும். மறுபக்கம் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பூட் ஸ்பேஸ் 34 லிட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450எஸ் (Ather 450S) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், ஓலா எஸ்1 ஏர் போட்டியிடும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை (Price) 1,19,999 ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது பார்ப்பதற்கு சற்று அதிக விலை போல் தோன்றினாலும் கூட, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே ஓலா எஸ்1 ஏர் கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், அந்த அளவிற்கு அனைவரையும் கவரும் வகையில் உள்ளன. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்தபடியாக எலெக்ட்ரிக் பைக்குகளையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அத்துடன் ஓலா நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருப்பதில் இருந்தே, ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆரம்பத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது வியத்தகு வளர்ச்சியை சந்தித்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








