ஷோரூம்களுக்கு வந்தாச்சு!! எல்லாரும் இந்த நிறத்தில் ஓலா ஸ்கூட்டரை வாங்க போறாங்க - புக்கிங்குகள் விறுவிறுப்பாக!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில், கண்ணை கவரக்கூடிய நியான் பச்சை நிறத்தில் ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைய துவங்கி உள்ளன. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் வேகாக வளர்ச்சிக் கண்டுவரும் நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் விளங்குகிறது. கடந்த 2023 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 19,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓலா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

ola s1 air at showroom

ஏனெனில், விலை குறைவான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 ஏர்-க்கான முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டு உள்ளன. முன்பதிவுகள் துவங்கப்பட்ட 3 மணிநேரத்திற்கு உள்ளாகவே சுமார் 3,000 எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் டுவிட்டரில் தெரிவித்தார். முன்பதிவுகளை மேலும் அதிகரிக்கும் விதமாக எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.09 லட்சம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின் இந்த விலையில் ரூ.10,000 அதிகரிக்கப்படும் என்பதால், பலரும் அதற்கு முன்னதாக எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓலாவின் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ola s1 air at showroom

ஷோரூம்களில் இருந்து வெளியாகியுள்ள ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் படங்களில் ஸ்கூட்டர் கண்ணை கவரக்கூடிய நியான் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இத்தகைய நிறம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முதன்முதலாக வழங்கப்பட்டு உள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பு எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதன்பின் எஸ்1 ஏர் ஸ்கூட்டர் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை மாத இறுதியில்தான் எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. இதற்கிடையில், எஸ்1 வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளதால், தற்போதைக்கு எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 புரோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றிற்கு இடையில் புதிய வேரியண்ட் ஏதாவது அறிமுகம் செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

ola s1 air at showroom

நியான் பச்சை நிறம் மட்டுமின்றி, புதிய ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மொத்தம் 5 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம். அதிநவீன மூவ் ஓ.எஸ்3 மென்பொருள் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்டி மோட், ப்ளூடூத் அழைப்பு, மூட்கள் மற்றும் புரோஃபைல்ஸ் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம். அத்துடன், இந்த மென்பொருள் மூலமாக ஸ்கூட்டரை குறிப்பிட்ட தொலைவில் இருந்து அன்லாக் செய்ய முடியும்.

ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. 4.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் இந்த பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 125கிமீ ரேஞ்சை பெற நீங்கள் ஈக்கோ மோடில் செல்ல வேண்டும். ஏனெனில் எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என 3 விதமான மோட்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நியான் பச்சை நிறம் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கணக்கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஷோரூமில் இருந்து வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த பின் பலரும் இந்த நியான் பச்சை நிறத்தில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவர் என நினைக்கிறோம். இத்தகைய நிறத்தில் இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு எப்படி உள்ளது? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 2, 2023, 11:36 [IST]
English summary
Ola s1 air electric scooter arrives at showroom
மேலும்... #ஓலா #polaris #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X